Tuesday, October 26, 2010

சட்டம் இப்படித்தான் பேசும்!!!

சமீபத்தில் டில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு குறித்து சில பதிவுகளையும் ஆக்ரோஷமான எதிர்வினைகளையும் படிக்க நேர்ந்தது. அந்த பதிவை எழுதியவர்களும் பின்னூட்டமிட்டவர்களும் தீர்ப்பை குறை சொல்லியிருந்தார்கள்.

சரி அப்படி என்ன தான் வழக்கு? என்ன தான் தீர்ப்பு? என்று ஆராய்ந்ததில் பெண் வீட்டாரின் வக்கீல் தலையில் ஆர்டர் ஆர்டர் ஆர்டர் என்று மூன்று முறை குட்டவேண்டும் போல் இருந்தது. ஆண் வீட்டாரின் வக்கீலுக்கு ஒரு சபாஷ் போடலாம்.

உண்மையில் இந்த தீர்ப்பு மிகவும் நுட்பமானது.

காலம் காலமாய் வரதட்சணை வழக்குகளில் நாம் மாப்பிள்ளை வீட்டார் தண்டிக்கப்படுவதை மட்டுமே பார்த்து பழகிப்போனதால் ஒரு பெண் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணைக்கு வருகிற பொழுது அது ஆச்சரியமாகவும் அபத்தமாகவும் இருக்கிறது. வரதட்சணை கேஸ் என்றாலே மாப்பிள்ளை வீட்டார் மீது தானே வழக்கு பதிய வேண்டும் எதற்கு பெண் மீது வழக்கு போடுகிறார்கள் என்று பெரிய அளவில் கொதித்துப்போகிறோம். அப்படி கொதிப்பதற்கு அவசியமே இல்லாமல் இந்த தீர்ப்பு பெண்ணுக்கு சாதகமாகவே வழங்கப்பட்டது என்பது தான் உண்மை.

வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றம். லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம். ஆனால் பெரும்பாலும் லஞ்சம் வாங்கியவரையே தண்டித்து சிறையில் அடைப்பதை பார்த்துவிட்ட நமக்கு முதல் முறையாக லஞ்சம் கொடுத்ததற்காக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் போது வியப்பாக இருக்கிறது.

நான் செய்திகளில் படித்தவரை.

பெண் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கிறாள். அதிலே "திருமணத்திற்கு முன்பு இவ்வளவு வரதட்சணை கொடுத்தோம். அது போதாமல் இன்னும் இன்னும் வேண்டும் என்று என்னை கொடுமை படுத்துகிறார்கள். எனவே மாப்பிள்ளை வீட்டாரை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கைது செய்ய வேண்டும்" என்று முறையிடுகிறார்.

இப்போது தான் நீங்கள் ஆண் வீட்டாரின் வக்கீலுடைய சட்ட புத்தி சாதுர்யத்தை கவனிக்க வேண்டும். மணமகள் கொடுத்த புகாரிலும் தொடர்ந்து அளித்த வாக்குமூலத்திலும் தான் வரதட்சணை கொடுத்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார். வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் தவறு. எனவே வரதட்சணை கொடுத்த குற்றத்திற்காக பெண் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் ஆர்டரோடு வருகிறார். வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

பிறகு அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி பெண் மேல் முறையீடு செய்கிறாள்.

அந்த மேல் முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் "பெண் , தான் கொடுத்த புகாரில் வரதட்சணை கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார். இருந்தபோதும் பாதிக்கப்பட்ட ஒருவருடைய வாக்குமூலத்தை வைத்து அதை அவருக்கு எதிராக திருப்பி அவரையே குற்றம் சாட்ட முடியாது" என்று தெரிவிக்கிறது.

அதே போல் "வரதட்சணை கொடுக்கவில்லை என்றால் திருமணத்தை நடத்தவிடமாட்டோம் என்ற மாப்பிள்ளை வீட்டாரின் மிரட்டலுக்கு பயந்து வரதட்சணை கொடுத்திருக்கிறார்கள். எனவே அந்த பெண்ணை நாம் சூழ்நிலை கைதியாகவே பார்க்கவேண்டும். அவர் மீது குற்றம் சுமத்தி வழக்கு பதிய முடியாது. எனவே இவ்வழக்கை தள்ளுபடி செய்கிறேன்." என்று தீர்ப்பளித்திருக்கிறார்.

இந்த வழக்கில் முழுக்க முழுக்க பெண்ணுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

எத்தனை அழகாய் இருக்கிறது பாருங்கள் இந்த சட்டம்.

"வரதட்சணை கொடுப்பதும் தவறு. வாங்குவதும் தவறு".

இந்த சட்டத்தின் சிறப்பம்சம் வரதட்சணை வாங்குவதை எளிதாக நிரூபிக்க முடியும் என்பதே. அதே சமயம் வரதட்சணை கொடுக்க முயல்கிறார்கள் என்று மாப்பிள்ளை வீட்டார் நிரூபிப்பது சாத்தியமல்ல. இது முழுக்க முழுக்க பெண்களுக்கு சாதகமான ஒரு சட்டம். இது அவசியமா இல்லையா என்பது குறித்து நான் இங்கே கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் இச்சட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்கு ஆதரவானது என்பது மறுப்பதற்கில்லை.அந்த ஆதரவின் தொடர்ச்சியாகத்தான் இந்த தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இத்தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் இரட்டை வேடம் போடுகிறதென்றோ அல்லது "மிரட்டலின் பேரில் தவறு செய்தால் அது தவறு இல்லையா? " என்பது போன்ற அதிபயங்கர கேள்விகளை தொடுப்பதும் குற்றம்சாட்டுவதும் அவசியமற்றது.

இதுவரை இந்தியாவில் மாப்பிள்ளை வீட்டார் யாராவது பெண் வீட்டார் மீது வரதட்சணை கொடுத்ததாக வழக்கு போட்டு நிரூபித்தார்களா. விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தால் தான் உண்டு. சாட்சிபூர்வமாக ஆதாரபூர்வமாக பிச்...ரொம்ப கஷ்டமப்பா.

சட்டம் இப்படித்தான் பேசும்.

14 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

ம.தி.சுதா said...

சுவாரசியமாக இருக்கிறது இப்படியும் நடக்குதா..???

மதுரை சரவணன் said...

//"வரதட்சணை கொடுப்பதும் தவறு. வாங்குவதும் தவறு". //

ammmam

நாகராஜசோழன் MA said...

//இதுவரை இந்தியாவில் மாப்பிள்ளை வீட்டார் யாராவது பெண் வீட்டார் மீது வரதட்சணை கொடுத்ததாக வழக்கு போட்டு நிரூபித்தார்களா.//

இப்படி பேசினால் ஆணாதிக்கவாதி என்று சொல்வார்கள்.

Katz said...

கதை எழுதுங்க பாஸு. நீதியை பிறகு நிலை நாட்டலாம்.

Anonymous said...

சரியாகச் சொன்னீங்க விசா. பெண்ணின் குடும்பத்துக்கு எதிராக, வரதட்சனை வழங்கியதற்காக தொரடப்பட்ட வழக்கில், அந்தக் குடும்பத்துக்கு ஆதரவான தீர்ப்பைத் தான் நீதிபதி வழங்கியுள்ளார். திருமணத்துக்காக வேறு வழியில்லாமல் கொடுத்தால் தவறில்லை என. இதைத் தவறாக புரிந்து கொண்டு எல்லாரும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

வானம்பாடிகள் said...

:).

கலாநேசன் said...

லஞ்சம் கொடுக்கும் போது பிடித்தாலும் தண்டனை கிடையாதா?

இது நல்லாருக்கே....

சைவகொத்துப்பரோட்டா said...

//கதை எழுதுங்க பாஸு//

ரிப்பீட்டுகிறேன்.

498ஏ அப்பாவி said...

வரதட்சணை வாங்குவதும் குற்றம் அதுபோல் கொடுப்பதும் குற்றம்.. இதை அப்பட்டமாக அந்த பெண் தன்னுடைய FIR ல் எனது தகப்பனார் எனக்கு 75 பவுன் நகை வரட்சணையா கொடுத்தார் என்று கொடுத்திருந்தாலும் அதை 99 சதவிதம் எந்த நீதிபதியும் அதை சுட்டிக்காட்டி வழக்கு பதிய சொல்லவதில்லை... நாமாக எதிர்வழக்கு பதிவசெய்தாலும் நாய்பொழப்புதான்... மற்றும் பெரும்பாலான வரதட்சணை வழக்குகள் மனமகன் வீட்டாரின் கைது படலம் முடிந்த பிறகு நீதிமன்றத்திற்கு வெளியல் கட்டபஞ்சாயத்து மூலமாக ஆட்களை பொறுத்து மனமகன்வீட்டாரிடமிருந்து பணம் பிடுங்கி செட்டில் (??) செய்துவிடுவார்கள்(இப்பொழுது என்னுடைய வழக்கிலும் இந்த பேரம் ஆரம்பமாகிவிட்டது ஆனால் நான் இதை விடுவதாக இல்லை). மனமகன் வீட்டாரும் இந்த சனியன் தொலைந்தால் போதும் என்ற மனப்பான்மையே... யாரும் எதிர்வழக்கை தொடுப்பதில்லை


இப்பொழுது எதற்கெடுத்தாலும் பொய்வரதட்சணை வழக்கு பதிவுசெய்வது என்பது பேஷன் ஆகிவிட்டது...
இந்த பொய் வரதட்சணை வழக்குகள் பற்றி மேலும் தகவல்களுக்கு

www.tamil498a.com
www.saveindianfamily.org.
www.498a.org போன்ற வலைதலங்களுக்க சென்று பார்வையிட வேண்டுகின்றேன்...

மற்றும் தங்களுடைய மின்அஞ்சலுக்கு ஒரு பொய்வரதட்சணை வழக்கு எப்படி எழுதபட்டிருக்கும் என்பதை (எங்கள் மீது போடப்பட்ட FIR)யை அனுப்பி வைக்கின்றேன்...

இதை பற்றி தாங்கள் வலைதளம் மூலமாக வெளியட்டதற்கு நன்றி...

பொய் வரதட்சணை வழக்கில் பாதிக்கப்பட்டவன்


498ஏ அப்பாவி,,

http://ipc498a-victim.blogspot.com

ரோஸ்விக் said...

சம உரிமைகள் கேட்டு பெறவேண்டியது ஆம்புளைகதானா! :-)

ஆம்புளைகளுக்கு இந்த இந்த உரிமைகள் எல்லாம் இல்லைன்னு ஏன் பெண்ணுரிமைக்காக போராடுறவங்க சொல்லலை??

சே.குமார் said...

நல்லாருக்கே....

Thanglish Payan said...

Nalla irukku

N said...

http://www.facebook.com/profile.php?id=100000048564052

Mr.Vijaya raj has copied this article in his face book page as if it is written by him.

Who is the original author?

 
Top Tamil Blogs by Tamilers