Wednesday, November 24, 2010

டையிங் டுகெதர்!!!
















லிவிங் டுகெதருக்கு எதிரான எங்கள் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்த போது மணி மாலை ஏழாகியிருந்தது. வானம் இருட்டியிருந்தது. டாஸ்மாக் பாஸ்மார்க் வாங்கி டிஸ்டிங்ஷனை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. அன்று போராட்டத்திற்கு மொத்தம் இருபது பேர் திரண்டிருந்தோம். போராட்ட குழுவில் பெண்கள் ஆண்கள் என எல்லா வயதிலும் ஆட்கள் இருந்தார்கள். எல்லோருடைய கண்களிலும் கோபம். வெள்ளைக்கார மதருக்கும் தமிழ் நாட்டு பிரதருக்கும் பிறந்த லிவிங் டுகெதர் என்னும் டெர்ரர் குழந்தை எப்படி தமிழ் சமூகத்தை தன் குடிசைக்கு எதிரே பல மாதங்களாக திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையைப் போல் சகதி ஆக்கியிருக்கிறது என்ற கோபம்.

இந்த சகதியை அகற்ற சவுதியின் சட்டங்கள் தார் சரி என்று கலாகௌமுதியில் தான் அளித்த பேட்டியை அப்போது நினைவு கூர்ந்தாள் குழுவின் இளைய தலைமுறை இஞ்சியானா.

"சத்யம் தியேட்டருக்கு போனால் பத்திய சாப்பாடு தான் கட்டுப்படியாகும். விலை அப்படி. இருந்தபோதும் லிப்ஸ்டிக் உதடுகளும் பீட்டர் இங்கிளீஷும் மொய்க்கிறதே எதற்கு? வாச்சிங் டுகெதர். அதே தான் அதாவது திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒன்றாக திரையரங்கில், அருகருகே அமர்ந்து படம் பார்க்கும் பழக்கம் - வாட்சிங் டுகெதர். எப்போது தமிழகத்தில் இந்த கலாசாரம் குடிகொண்டது? எப்போது தமிழனும் தமிழச்சியும் வாச்சிங் டுகெதருக்கு தயாரானார்களோ அப்போதே வாச்சிங் டுகெதரை விரட்டி நோ பார்க்கிங்கில் நிறுத்தியிருந்தால் இன்று லிவிங் டுகெதர் வரை தமிழன் மஞ்சள் கோட்டை தாண்டி வந்திருப்பானா?" என்று குழுவின் விடிவெள்ளி வெங்கி பொங்கி எழுந்தார்.

நண்பர்களே உண்மையில் அதுவரை வாச்சிங் டுகெதர் என்பது குரூப் ஸ்டடி என்று என் வீட்டுக்கு வரும் நண்பர்களோடு மொட்டை மாடியில் அமர்ந்து பக்கத்து வீட்டு பிகரை வாச்சிங் டுகதருவோமே அது தான் என்று அப்பாவியாய் நினைத்திருந்தேன். என் அறிவு இருளை விளக்கி வைத்த வெங்கிக்கு நன்றி.

எங்கள் குழுவில் கடந்த ஒரு மாதமாகவே இந்த லிவிங் டுகெதர் என்னும் கலாசார வைரசைப் பற்றி தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தோம். நானும் முதலில் லிவிங் டுகெதர் என்பது ஒரு சித்தாந்தம் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அப்பாவியாய். அதாவது எப்படி நம் வீட்டில் கரப்பான் பூச்சி பல்லி எறும்பு கொசு ஈ புழு பூச்சி எலி பெரிச்சாளி என்று சகலமும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்கிறதோ(Living Together) அதை அடிப்படையாகக்கொண்ட ஒரு தியரி என்றே வரட்சியாக நினைத்திருந்தேன். அந்த எண்ணத்தின் மீது கோலி சோடாவை பிய்ச்சி அடித்து குதூகலமூட்டியவர் நண்பர் கலாசாரக் கடிவாளம் சுடலையார்.

இவருடைய நிஜப்பெயர் சுடலையன். தமிழ் கலாசாரத்தின் படி இரண்டு மூன்று போஸ்டர்களில் இவர் பெயர் தென்படத்தொடங்கியதும் தன் பெயருக்கு பின்னால் 'யார்?' சேர்த்து சுடலை'யார்' ஆக்கிக்கொண்டார். இப்படி யாரென்றே தெரியாத 'யார்'கள் தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். நானும் தமிழன் என்பதால் இன்னும் கொஞ்ச காலத்தில் 'விசா'வார் என்று என்று என்னையும் அழைக்கும்படி உங்களுக்கு அன்பு கட்டளையிடக்கூடும்.

சுடலை தான் லிவிங் டுகெதர் பற்றிய விழிப்புணர்வை என்னுள் ஊட்டியவன். லிவிங் டுகெதர் என்றால் என்ன? என்று கேட்டபோது லிவிங் டுகெதர் என்பது யாதெனில் 'ஆணும் பெண்ணும் முறையாக திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக ஒரே அறையிலோ ஒரே வீட்டிலோ குடியிருப்பது' என்று XXX வீடியோ கணக்காய் முதல் காட்சியிலேயே மேட்டருக்கு வந்தான்.
எனக்கு தற்போது லிவிங் டுகெதருக்கான வாய்ப்பு இல்லை என்பதால் நானும் லிவிங் டுகெதருக்கு எதிராக போராடும் கூட்டத்தில் என்னை அடயாளப்படுத்திக்கொண்டேன்.எல்லாம் ஒரு வயிற்றெரிச்சல்.

அடுத்ததாக எங்கள் போராட்டக்குழு தலைவர் பஞ்ச் பரமசிவன் தன் உரையை எடுத்த எடுப்பிலேயே "ஒருவனுக்கு ஒருத்தி என்பது தானே நம் தமிழ் கலாசாரம் " என்று காரசாரமாக தொடங்கினார். நான் நினைத்துக்கொண்டேன் "ஒருவனுக்கு ஒருத்தியையே சமாளிக்க முடியவில்லையே ஒரு வேளை தமிழ் கலாசாரப்படி ஒருவனுக்கு இருத்தி என்று இருந்திருந்தால் ஆண்களின் நிலமை திண்டாட்டம் தான்?"


"திருமணம் செய்துகொள்ளாமல் வாராவாரம் மாதாமாதம் தன் துணையை பார்ட்னரை மாற்றிக்கொண்டு வரும் எச்சக்கலத்தனத்திற்கு பெயர் தான் லிவிங் டுகெதர்" என்று விளாசி தள்ளினாள் வீரப்பெண்மணி வேங்கை அரசி வேதிகா.

என் பின் மண்டைக்கு உரைத்தது இது தான். லிவிங் டுகெதர் என்பது செல் போன் காலர் டோன் மாதிரி. வாராவாரம் மாதாமாதம் புதுப்புது ராகங்களாக மாற்றிக்கொண்டே இருக்கலாம். ஆனால் மனைவி என்பவள் தரை வழி தொலைபேசி . டிட்டிடி...ட்..டிரிங்.....டிடிட்ட்...ட்..டிரிங்...என்று அலாரம் கணக்காய் அலறிக்கொண்டே இருப்பாள். நாம் எடுத்து(எதிர்த்து) பேசிவிட்டால் கட் ஆகிவிடும் அபாயமும் உண்டு.

இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் தங்கள் கருத்துக்களை பெருங்கோபத்தோடு கொட்டி இறுதியில் 'இன்று தமிழ் கலாசாரத்தின் மையத்தில் அமர்ந்துகொண்டு அதன் கிளைகளை சிரச்சேதம் செய்துகொண்டிருக்கும் லிவிங் டுகெதர் எனும் அந்நிய கலாசார அமெரிக்கவாதத்தை வேறறுக்க சூளுரைப்போம்' என்று முடிவெடுத்தோம்.

அடுத்து என்ன செய்யலாம் என்று செயற்குழு கூடியது. அதாவது நாங்கள் இப்போது கூடியிருக்கும் தெருவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. அங்கே கால்சென்டர், பிபிஓ, ஐ.டி, என்று இன்னபிற முதலாளித்துவ கம்பெனிகளில் வேலைபார்க்கும் அடிமை தொழிலாளிகள் மற்றும் கல்லூரியில் படிக்கும் பணக்கார மாணவர்கள் என்று நிறைய பேர் லிவிங் டுகெதராகியிருக்கிறார்கள் என்ற தகவல் எங்கள் அமைப்பின் உளவுத்துறை செய்லர் ஊர்வம்பு உன்னிக்குட்டி மூலம் தெரியவந்தது.

'உன்னிக்குட்டி!!!,
நீ உளவுத்துறையின் செல்லக்குட்டி
பார்க்கவேண்டுமானால் நீ பன்னிக்குட்டி
பழகிப்பார்க்க நீ வெல்லக்கட்டி' என்று அடுக்கு மொழியில் தன் பேச்சை துவக்கினார் அஜித.டி.ஆர்.

அவர் ஒரு யோசனை சொன்னார். அதாவது உடனடியாக நாம் அனைவரும் குழுவாக புறப்பட்டு அந்த அடுக்கு மாடி குடியிருப்பை முற்றுகையிடவேண்டும். பிறகு ஒவ்வொரு வீடாகச்சென்று அங்கே திருமணம் ஆகாமல் ஆணும் பெண்ணும் தங்கியிருக்கிறார்களா என்று சோதனையிடவேண்டும். அப்படி தங்கியிருந்தால் அவர்களுக்கு அறிவுரை கூறி வீட்டை காலி செய்து தனித்தனியே வசிக்கச்சொல்லவேண்டும். அதற்கு பணியாமல் முரண்டு பிடித்தால் உடனடியாக அந்த ஜோடிக்கு அங்கேயே திருமணம் செய்துவைக்கவேண்டும். அந்த முற்றுகை போராட்டத்திற்கு பெயரும் ஒன்று வைத்தார்.

'Khushboo Anti Living Together Operation'

குஷ்பு ஆன்டி என்பது தெரியும். மற்றபடி இப்படி ஒரு பெயரை எதற்கு வைத்தார் என்று குழம்பிக்கொண்டிருந்தேன். பிறகு அஜித டி.ஆர். தன் பாக்கெட்டிலிருந்து கொத்தாக எதையோ உருவினார். ஒரே ஆச்சரியம். கையில் கொத்தாக ஒரு இருபது வைத்திருந்தார். அது என்ன? இன்று உலகெங்கும் விரவிக்கிடக்கும் தமிழ் சமூகத்தை கலாசாரத்தோடு கட்டி வைத்திருக்கும் அந்த உன்னதக்கயிறு. தாலி!!! ஒரு இருபது தேற்றி வைத்திருந்தார். இப்போது தான் இந்த சின்ன தம்பிக்கு தலைப்பின் அர்த்தம் புரிந்தது. அஜித.டி.ஆர் தாலிக்கயிறோடு கம்பீரமாய் முன்னால் நடக்க நாங்கள் இருபது பேரும் அந்த அடுக்குமாடி குடியிருப்பை நோக்கி எங்கள் போராட்ட பயணத்தை தொடங்கினோம்.

அப்போது என்னோடு நடந்து வந்துகொண்டிருந்த குழுவின் மிகவும் வயதான போராளி ஒரு விஷயத்தை சொன்னார். தன் மகள் கால் சென்டரில் வேலை பார்ப்பதாகவும் தான் வீட்டில் சிகிரெட் பிடிக்க அனுமதிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தனி வீட்டில் பாய் பிரண்டோடு ஐக்கியமாகிவிட்டதாகவும் இந்த போராட்டத்தின் போது தன் மகளை மீட்டுத்தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். கூட்டத்தில் அதை கலந்து பேசி முதலில் பெரியவரின் மகள் வீட்டை தான் முற்றுகையிடவேண்டும் என்று தீர்மானித்தோம்.

வீட்டை நெருங்கி கதவை தட்டினோம். தாலியோடு அஜித டி.ஆர். முன்னால் நின்றிருந்தார். எங்கள் போராட்டத்தின் முதல் கஸ்டமரை ஆவலோடு எதிபார்த்திருந்தோம். கதவு திறக்கப்பட்டது. தலையில் பாப் கட். உதட்டில் சிகிரெட். நெஞ்சில் டேட்டோ கையில் விஸ்கி சகிதமாய் ஹாலிவுட் வில்லி போல் ஒருத்தி தோன்றினாள்.

"ஊ ஆர் யூ?" என்றாள் படு திமிராய்.
அஜித டி.ஆர். விடுவாரா? "ஏய்...உனக்கு மட்டும் தான் இங்கிளீஷ் தெரியுமா? பிரிட்டன் போனா இங்கிளீஷ்ல பேசுவேன் பிரான்ஸ் போனா பிரெஞ்சுல பேசுவேன். ஜெர்மனி போனா ஜெர்மன்ல பேசுவேன். "

"டேய் நீ எங்க போனாலும் வாயில தான்டா பேச முடியும்" என்று நான் அடித்த கமென்ட்டை இரண்டு பேர் புரிந்துகொண்டு சிரித்தார்கள்.

இப்படியே அடுக்கடுக்காய் கிட்டத்தட்ட முப்பது நாடுகளின் பெயரை அடுக்கிக்கொண்டே போனார். இந்த நிலமை தொடருமேயானால் ஹாலிவுட் வில்லி அசட்டையாக கதவை சாற்றிவிட்டு உள்ளே போய்விடும் அபாயத்தை உணர்ந்து சுடலை உள்ளே புகுந்தான்.

"சார் நிறுத்துங்க சார். யம்மா...உனக்கு கல்யாணம் ஆயிடிச்சா?"
"இல்ல"

"இப்ப யாரோட தங்கியிருக்க?"
"பிரண்ட்"

"இப்படி கல்யாணத்துக்கு முன்னாடி பையனும் பொண்ணும் தனியா தங்கக்கூடாது தெரியுமா?"

"என்னது தனியா தொங்கக்கூடாதா? வாட்?" உபயம் விஸ்கி.

"என்னம்மா நக்கலா? இப்படி பிரண்டுன்னு சொல்லி மாசா மாசம் ஒவ்வொருத்தன் கூட தங்குறீங்க. லிவிங் டுகெதர்ன்னு அதுக்கு பேரு வேற. ஒருத்தனுக்கு ஒருத்திங்குறது தான் தமிழ் பண்பாடு தெரியுமா?"

"அங்கிள் நானும் தமிழ் பண்பாட்ட பாலோ பண்றேன். ஐ டோன்ட் அலோ குரூப் செக்ஸ். எப்பவும் இந்த ஒருத்திக்கு அட் எ டைம் ஒருத்தன் மட்டும் தான்."

"இது வேலைக்கு ஆகாது. கூப்பிடுங்க அந்த பையன. இவங்களுக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வச்சா தான் சரிப்படும்" என்று கர்ஜித்தான் சுடலை.

அந்த பெண் படு கூலாக "இத பாருங்க போள்க்ஸ் நான் எந்த பையனோடையும் இங்க தங்கல. ஐ ஆம் லிவிங் வித் லிஸி. மை பிரண்ட். லிஸி என்னோடு ஒர்க் பண்றவ. இந்த தமிழ் நாட்டுல ஒரு பொண்ணும் பொண்ணும் ஒரே வீட்டுல சேந்து வாழக்கூடாதா?" என்று எதிர் கேள்வி எழுப்பினாள்.

லிஸி என்று அவள் குறிப்பிட்ட பெண் அதீத நாணத்தோடு வாசல் அருகில் வந்தாள்.

"அடச்சே....உங்க பொண்ணு ஏதோ பையனோட லிவிங் டுகெதர்ன்னு சொல்லி எங்கள இப்படி ஏமாத்திட்டியே பெரியவரே" என்று எல்லோரும் பெரியவரை திட்டிவிட்டு அடுத்த வீட்டுக்கு நகர்ந்தோம்.

லிஸியும் வில்லியும் அறை கதவை சாற்றினார்கள். கூட்டம் தீக்கனலாய் அடுத்த அறையை நோக்கி பாய்ந்தது. நான் மட்டும் நிதானமாக கதவு சாற்றிய பிறகு துவாரத்தில் காது கொடுத்து கேட்டேன். கசமுசா சத்தம் முனகல் முக்கல் வில்லியும் லிஸியும்.... அடசீ. ஆமா இது நம்ம அஜென்டாவுல இல்லையே.

-----------------------

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து ஒரு நாள் இரவு பதினோரு மணிக்கு வீட்டுக்கு நடந்து போய்க்கொண்டிருந்தேன். அப்போது பிளாட்பாரத்தில் இரண்டு பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் ஒரு அழுக்கு மூட்டையில் தலை வைத்து படுத்திருக்க அவள் குத்த வைத்து அவன் அருகில் அமர்ந்திருந்தாள். அவர்கள் நகரத்தின் ஏதாவது ஒரு வீதியில் பிச்சை எடுப்பவர்களாக இருக்கவேண்டும். மிக அழுக்காக தெரிந்தார்கள். இருவருக்கும் வயது நாற்பதை தாண்டியிருக்காது. மிக நெருக்கமாக அமர்ந்து ஏதோ ரகசியமாய் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் நெருங்க நெருங்க அவர்கள் பேச்சு நின்று நான் விலகுவதற்காக காத்திருந்தார்கள். நான் அவர்களையே உற்று பார்த்தேன்.

அவன் என்னிடம் ஏதோ கேட்க வந்து நிறுத்திக்கொண்டான். வயிற்றில் கை வைத்தான். உடைந்த பாஷையில் பசி என்றான். நான் பர்ஸிலிருந்து பத்து ரூபாய் எடுத்து அவர்களிடம் கொடுத்தேன். அவன் வாங்கவில்லை.

"காசு வேணாம் சார். பசிக்கிது. சாப்பிட்டு இரண்டு நாள் ஆகுது. நாங்க பிச்சக்காரங்க இல்ல சார். ஏதாவது சாப்பிட வாங்கி கொடுங்க" என்றான்.

அருகில் தள்ளு வண்டியிலிருந்து பரோட்டாவும் குறுமாவும் வாங்கி அவர்களிடம் கொடுத்தேன். நன்றியோடு பெற்றுக்கொண்டார்கள்.

"நீங்க மட்டும் தானா? உங்களுக்கு குழந்தைங்க இருக்காங்களா? பக்கத்துல எங்கயாவது பசியோடு தூங்கிட்டு இருக்க போறாங்க. அவங்களுக்கும் ஏதாவது....."

"இல்ல சார் எங்களுக்கு குழந்தை இல்ல. அது இல்லாம நாங்க புருஷன் பொண்டாட்டி இல்ல." என்றார்.

"அப்புறம்?"

"லிவிங் டுகெதர்" என்றார் பரோட்டாவில் குறுமாவை ஊற்றியபடி.

"இப்படி கல்யாணம் பண்ணிக்காம ஆணும் பெண்ணும்......"

நான் பதிலேதும் பேசாமல் நடந்தேன்.

நாளைய கலாசார மாற்றங்களை விட இன்றைய பசி கொடுமையானது.

--------------------

32 comments:

♔ℜockzs ℜajesℌ♔™ said...

i am 1st

VISA said...

வாங்க நண்பரே படிச்சிட்டு வாங்க.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///இந்த சகதியை அகற்ற சவுதியின் சட்டங்கள் தார் சரி என்று கலாகௌமுதியில் தான் அளித்த பேட்டியை அப்போது நினைவு கூர்ந்தாள் குழுவின் இளைய தலைமுறை இஞ்சியானா.///

சவுதி ல இருக்க சட்டங்கள் வேண்டாம் . . .

சும்மா இந்திய ல உக்காந்துக்கிட்டு சவுதில இருக்க சட்டம்தான் வேண்ணுடும்ன்னு சொல்லுரங்கவங்க . . தயவு செய்து சவுதி க்கு உடனே விசா எடுத்துக்கிட்டு next flight புடிச்சு வந்து , சவுதில நாலு வருஷம் மணலை எண்ணிட்டு போங்க அப்போதான் தெரியும் . . .


kindly read this kavithai :
http://rockzsrajesh.blogspot.com/2010/11/blog-post_09.html

now i am working in saudi . . .

குடுகுடுப்பை said...

நானும் குடுகுடுப்பையார் அப்படின்னு போட்டு பிரபலம் ஆகலாம்னு பாத்தேன். கீழ்சாதிக்காரனெல்லாம் "யார்" விகுதி சேர்க்க கலாச்சாரம் அனுமதிக்கவில்லை விசாயார்.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

"சத்யம் தியேட்டருக்கு போனால் பத்திய சாப்பாடு தான் கட்டுப்படியாகும். விலை அப்படி.

i agree . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////இருந்தபோதும் லிப்ஸ்டிக் உதடுகளும் பீட்டர் இங்கிளீஷும் மொய்க்கிறதே எதற்கு? வாச்சிங் டுகெதர். அதே தான் அதாவது திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒன்றாக திரையரங்கில், அருகருகே அமர்ந்து படம் பார்க்கும் பழக்கம் - வாட்சிங் டுகெதர். எப்போது தமிழகத்தில் இந்த கலாசாரம் குடிகொண்டது?////

எம் . ஜி . ஆர் , சரோஜா தேவி காலத்துல இருந்தே இருக்கு . . . டூரிங் டக்கிஸ் ல இருட்டுல மண்ணை குவிச்சு வச்சு பக்கத்துக்கு பக்கத்துல உக்காந்து படம் பார்த்து ரசிச்ச ஜோடிகள் . . . ஏதோ yesterday தான் இப்படி ஆரம்பிச்சுசுன்கிற மாதுரி ஓவர் பீலிங்க்ஸ் வேண்டாம் . . ..

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////லிவிங் டுகெதர் என்பது யாதெனில் 'ஆணும் பெண்ணும் முறையாக திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக ஒரே அறையிலோ ஒரே வீட்டிலோ குடியிருப்பது' என்று XXX வீடியோ கணக்காய் முதல் காட்சியிலேயே மேட்டருக்கு வந்தான். ////

இதுக்கு விளக்கம் குடுக்க நான் தனியாதான் ப்ளாக் எழுதணும் . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////எனக்கு தற்போது லிவிங் டுகெதருக்கான வாய்ப்பு இல்லை என்பதால் நானும் லிவிங் டுகெதருக்கு எதிராக போராடும் கூட்டத்தில் என்னை அடயாளப்படுத்திக்கொண்டேன்.எல்லாம் ஒரு வயிற்றெரிச்சல்.////

clap clap clap

there you are visa , i appreciate this.

this is visa's special . . .

Katz said...

// அகற்ற சவுதியின் சட்டங்கள் தார் சரி என்று // should be thaan sari.. please correct it. I will read and come

ராஜவம்சம் said...

குசும்பு அதிகமா இருந்தாலும் உண்மை காரமாகவே இருக்கு 'விசா'வார் .

Katz said...

அருமை. உங்கள் எழுத்துக்களில் இருக்கும் நையாண்டிதனமும் எகத்தாளமும் எளிதாய் வசிய படுத்துகின்றன. I love it...

RMS Danaraj said...

//நாளைய கலாசார மாற்றங்களை விட இன்றைய பசி கொடுமையானது.//

அருமை.

சேலம் தேவா said...

அப்பப்ப நடக்கற ஹாட்டாபிக் வச்சு கலக்கறீங்க எழுத்தாளரே..!!

அன்பரசன் said...

//"இல்ல சார் எங்களுக்கு குழந்தை இல்ல. அது இல்லாம நாங்க புருஷன் பொண்டாட்டி இல்ல." என்றார்.

"அப்புறம்?"

"லிவிங் டுகெதர்" என்றார் பரோட்டாவில் குறுமாவை ஊற்றியபடி.//

ஆஹா அங்கயுமா???

Dinesh said...

விசா'வார் வேண்டாம் வியாசர்'ன்னு வச்சுக்குங்க...

வானம்பாடிகள் said...

Visa:)). perfect.

பிரபாகர் said...

எக்ஸலண்ட்! கலக்கிட்டீங்க பாஸ்... மிகச் சரியாய் சொல்லியிருக்கீங்க!...

பிரபாகர்...

நாகராஜசோழன் MA said...

//ஆமா இது நம்ம அஜென்டாவுல இல்லையே.//

இன்னும் கொஞ்ச நாள்ல இதையும் அஜெண்டாவுல சேர்த்து எந்த பெண்ணும் இன்னொரு பெண்ணோடு சேர்ந்து தங்கக் கூடாதுன்னு சொல்லப் போறாங்களாம்.

துமிழ் said...

நாளைய கலாசார மாற்றங்களை விட இன்றைய பசி கொடுமையானது.

super

ponsiva said...

nice
.

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களுக்கு, எள்ளலான எழுத்து நடை சரளமாக வருகிறது! சிரிப்பை அடக்க முடியல.

//நாளைய கலாசார மாற்றங்களை விட இன்றைய பசி கொடுமையானது.//

நிதர்சனம்.

RVS said...

கோயிங் டுகதர்
வொர்க்கிங் டுகதர்
ஈட்டிங் டுகதர்
டிரிங்கிங் டுகதர்
வாட்சிங் டுகதர்
ஃபைனலி ஹி ஹி...
லிவிங் டுகதர்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

டையிங் டுகெதர்..

சாயம் வெளுக்கும் மச்சியார்! கண்டிப்பா வெளுக்கும்! :))

Katz said...

உங்களை பற்றி ஒரு பதிவு இட்டு உள்ளேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

VISA said...

Katz....
இதென்ன சின்ன புள்ள தனமா மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு அடிச்சு ஆடுங்க தல.

அண்ணாச்சி said...

தற்போது லிவிங் டுகதரை ஆதரிப்பவர்கள் தங்கள் மகள் லிவிங் டுகதரை தேர்ந்தெடுக்கும் போது ஆதரிப்பார்க்ளா?

Palay King said...

Congrats yaar....

Nice flow....

சதி லீலாவதி said...

அண்ணாச்சி said...
தற்போது லிவிங் டுகதரை ஆதரிப்பவர்கள் தங்கள் மகள் லிவிங் டுகதரை தேர்ந்தெடுக்கும் போது ஆதரிப்பார்க்ளா?//

சரியான கேள்வி.

பதில்: இல்லை சாகடித்து விடுவார்கள். கல்சர் முக்கியம் அல்லவா?

சே.குமார் said...

உண்மை காரமாகவே இருக்கு.

லெமூரியன்... said...

ஹ்ம்ம்....போட்டு தாக்குறீங்க....
:) :) :)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

அன்புள்ள விசாவுக்கு ,

எனக்கு பிடிச்ச 10 கமல் படங்கள் தொடர் பதிவுக்கு தங்களை அன்புடன் அழைக்கிறேன் .



http://rockzsrajesh.blogspot.com/2010/11/10-philosophy.html

நன்றி ,

ராக்ஸ் . . .

Banupriya said...

What exactly is you guys' problem with Living Together? Is it because you haven't got that chance or is it only based on Culture terms?

If it is culture -- one thing I would like to say to you - Today's Culture is tomorrow's history and nothing else. We had lots of Culture earlier in Tamilnadu. We had taken only what we want and with what we can dominate women. Why didn't the Culture favouring women were not taken earlier? All because of Men's selfishness and Egoistic look towards the Culture.

Living Together is not a sin; Also to do it, there needs a lot of dedication. Its not like changing the partners once a week and for heaven's sake that is not called 'Living Together' as per the Culture followed in the West.

 
Top Tamil Blogs by Tamilers