
ஆப்பிரிக்கா கண்டத்தின் அங்கோலா தேசத்தில் ஒரு நல்ல பழக்கம் உண்டு. வீட்டுக்கு வருபவர்களுக்கு முதலில் பன்னீர் தெளித்துவிட்டுத்தான் ஹல்லோவே சொல்வார்கள்.
பரத்தையர் இல்லமாக இருந்தாலும் பன்னீர் தெளித்துவிட்டுத்தான் பிகர்களையே அறிமுகப்படுத்துவார்கள். இதற்கு கிராமம் நகரம் என்று பாகுபாடு கிடையாது.
அப்படிக் பன்னீர் தெளிக்காதவர்களை அங்கே ஒருவரைக் கூட பார்க்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு மதச் சடங்கைப் போன்றது அது. அதைச் செய்யாதவர்கள் காட்டுமிராண்டிகளுக்கு சமம். நான் அங்கோளா வாசம் முடிந்து தமிழ்நாட்டுக்கு வந்த புதிதில் தமிழர்கள் யாருக்கும் அந்தப் பழக்கம் இல்லாததைக் கண்டு ஆச்சரியமும் எரிச்சலும் கடும் துன்பத்தையும் பின்னிரவில் உறக்கமின்மையையும் சொப்பனஸ்கலிதத்தையும் அனுபவித்திருக்கிறேன். நாமே வாயைத் திறந்து கேட்டால்தான் தெளிப்பார்கள். அது கூட எல்லார் வீட்டிலும் இருக்காது. நாம் தான் கடையில் வாங்கிக்கொண்டு போய் அவர்கள் கையில் கொடுத்து தெளிக்கச்சொல்லவேண்டும். அடடா, என்ன ஒரு கலாச்சாரம்!
என் உடல் அமைப்பு அப்படி. எப்போதும் அங்கங்கள் வியர்த்து துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடும். நீங்கள் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சென்ட் அடித்துக்கொள்வீர்கள் என்றால் நான் பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை அடித்துக்கொள்ளவேண்டும் இல்லையென்றால் அக்குள் நாற்றம் அறை முழுக்க பரவத்தொடங்கிவிடும்
அதுவும் பேசிக் கொண்டிருந்தால் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை சென்ட் அடித்தே ஆகவேண்டும். இல்லையென்றால் ஒரு கொடிய பாம்பை போல் நாற்றம் கம்பங்கூட்டிலிருந்து புறப்பட்டு கம்பவுண்ட் சுவர் தாண்டி கரகமாடிவிடும்.
வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸைத் தாண்டினால் நிலைமை மோசமாகி விடும். நான் மேடையில் பேசும் போது சென்ட் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு பேசுவதன் காரணம் இதனால்தான். சரி, குளிர்நாட்டில் இந்தப் பிரச்சினை இருக்காது என்று பார்த்தால் ஐரோப்பா சென்றபோது அங்கேயும் இது தொடர்ந்தது. ஆனால் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை தேவைப்படாது. அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு பிசிறு அவசியம்.
ஆனால் ஐரோப்பாவில் யாரும் சென்ட் அடித்து நான் பார்க்கவில்லை. தேவைப்பட்டால் நடு ரோட்டில் அனைத்தையும் துறந்துவிட்டு சுதந்திரமாக குளிக்கிறார்கள். சென்னை மவுண்ட் ரோட்டில் இது சாத்தியமாகுமா? அதனால் தான் தமிழன் இன்னும் இப்படி இருக்கிறான். பிரான்சிலிருக்கும் சுதந்திரம் தமிழனுக்கு பாத்ரூமிலும் கிடைப்பதில்லை.
ஆய் போய்விட்டு கழுவாமல் துடைத்துக்கொள்கிறார்கள். எனக்கோ ஆய் போய்விட்டு சுகமாக தண்ணீர் ஊற்றி அலசவேண்டும். பின்பு கட்டாயம் சென்ட் அடித்துக்கொள்ளவேண்டும்.
இல்லையென்றால் விளைவுகள் விபரீதமாகிவிடும். ஆனால் என்னைப்போன்ற ஏழை எழுத்தாளனுக்கு ஐரோப்பாவில் சென்ட் வாங்கி அடிக்கும் அளவுக்கு பண வசதி இல்லை.
அதில் ஆச்சரியம் பாருங்கள், ஐரோப்பாவில் கழிப்பறையில் கூட நம் ஊர் பினாயிலை விட சுத்தமான பினாயில் கிடைக்கிறது என்றாலும் கழிப்பறையில், இருக்கும் பினாயிலை எடுத்து சட்டையில் சென்ட் போல் தெளித்துக்கொள்ள மனம் ஒப்பாது. அதில் ஆச்சரியம் பாருங்கள். எங்கு போனாலும் பினாயில் பாட்டிலைத் தூக்கிக் கொண்டே அலைவேன்.
நான் சென்ற இரண்டு முறையும் டிசம்பர், ஜனவரி என்பதால் கடுங்குளிர் நேரத்தில் அப்படி நான் பினாயில் பாட்டிலோடு அலைவதை ஐரோப்பியர்கள் மிக ஆச்சரியத்துடன் பார்ப்பதை கவனித்திருக்கிறேன். பிரெஞ்ச் அதிபர் கூட இதைக்குறித்து பார்லிமென்டில் விவாதித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அங்கே எழுத்தாளர்களை கொண்டாடுகிறார்கள். இங்கே எழுத்தாளன் ஆசிட்டே குடித்தாலும் செய்தியில் வருவதில்லை.
நண்பன் ‘இது ஏதோ வியாதி’ என்றான். அதனால் ஊருக்குத் திரும்பியதும் மருத்துவரைப் பார்த்ததில் ‘உடம்பில் ஒரு பிரச்சினையும் இல்லை; பினாயில் அடிப்பது...மன்னிக்கவும் (சென்னை வந்த பிறகு சென்ட் அடிக்க தொடங்கிவிட்டேன்) சென்ட் அடிப்பது நல்லதுதான்’ என்று சொன்னார். ஆனால் சில இடங்களில் சென்ட் கிடைப்பதில்லையே?
முக்கியமாக, ஐரோப்பாவில் பினாயில் கேட்டால் ஒன்றும் புரியாமல் சற்று நேரம் முழித்து விட்டு ’இதுதான் எனக்குத் தெரிந்த பினாயில்' என்று சொல்லி ஒரு போத்தலை எடுத்துக் கொடுக்கிறான். போத்தலைத் திறந்து குடிக்கும்போதுதான் தெரிகிறது அது சோடா என்று.
என் சென்ட் கதையைக் கேட்ட மருத்துவர் ”சென்டுக்கு பதிலாக டியோடரென்ட் அடித்தால் சரியாய் போகும்" என்றார்.
சென்ட் வாங்க துட்டில்லாமல் கழிவறை கழுவும் பினாயிலை வாங்கி அடித்துக்கொள்ளும் இந்த ஏழை எழுத்தாளனால் டியோடரென்ட் வாங்க முடியுமா?
என் சென்ட் கதையை இங்கே சென்டிமென்ட் கதையாய் சொல்லவந்ததன் காரணம், புத்தக விழாவின் போது நான் படும் அவஸ்தையை எண்ணித்தான். ஆயிரக் கணக்கான மக்கள் கூடும் ஒரு இடத்தில், அதுவும் குளிரூட்டப்படாத நிலையில், அதுவும் போதாதென்று மேல்கூரையும் மூடப்பட்டு, காற்றோட்டம் தடை செய்யப்பட்ட இடத்தில் உடம்பு எவ்வளவு கப் அடிக்கும் ? யாராவது நெருங்கிய நண்பரிடம் சொல்லி வெளியிலிருந்து பன்னீர் பாட்டில் வாங்கி வரச் சொல்வேன். கொஞ்சம் அடித்து விட்டு மீதியை வைப்பேன். பத்து நிமிடம் கழித்துப் பார்த்தால் அந்த இடத்தில் பாட்டிலே இருக்காது. யாராவது எடுத்துக் அடித்து விட்டு வெறும் பாட்டிலை ஏன் அங்கே வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தூக்கி எறிந்திருப்பார்கள். திரும்பவும் துர்நாற்றத்தோடு காத்திருப்பேன், அடுத்த பாட்டில் பன்னீருக்காக. உங்களுக்குத்தான் இது புத்தகத் திருவிழா. எனக்கு துர்நாற்றப்பெருவிழா…..
DISC: இது யாரையும் தாக்குவதற்கான பதிவு அல்ல. ஜஸ்ட் பார் ஜாலி. சாருவின் இந்த கட்டுரை எனக்கு ஏனோ பிடித்திருந்தது.
நண்பர்களே கீழ்கண்ட பின்னூட்டம் அனுமதிக்கப்படாது.
ஓட்டவாய்நாராய்ணன் Said
அவங்கவங்க கஷ்டத்த அவங்கவங்க எழுதியிருக்காங்க :)

9 comments:
he... he.. he... nice
இதை படிக்கும் போதும் ஜாலி தான் நன்று நண்பரே
:)
நல்லா கலாச்சிட்டிங்களே
:-)))
இதுல சிலி வரவேயில்லையே:)))
குசும்புண்ணே உங்களுக்கு...!!!!
அருமையான கிண்டல் பதிவு . . . பாராட்டுக்கள்
பொங்கலுக்கே பட்டாசுன்னா தீபாவளிக்கு என்ன செய்வீங்களோ :-) சூப்பர்
Post a Comment