Wednesday, January 19, 2011

விஜய் எங்கே தோற்றார்?




என் அபிமான தேவி தியேட்டரில் சிறுத்தை திரைப்படம் சிறப்புக் காட்சி பார்த்துவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தேன்.

தியேட்டர் கவுண்டரில் ஒரு நாற்பது இளைஞர்கள் கூடியிருந்தார்கள். ஒரே கூச்சல் கும்மாளம் சிரிப்பு தள்ளு முள்ளு என்று தமிழ் கலாசாரத்தின் அடியை வருடிவிட்டுக்கொண்டிருந்தார்கள்.
வெறும் மூன்றே திரைப்படங்களில் வில்லன்களை அழித்து அந்நியாயத்திற்கு சமாதி கட்டி ஞாயத்தை நிலைநாட்டிய 'கார்த்தி'க்கா இப்படி ஒரு ரசிகர் பட்டாளம். அதுவும் கார்த்தி இன்னும் குடிசை குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டு பாட்டு பாடவில்லை தாயை போற்று என்று முழங்கவில்லை இலவசமாக தையல் மெஷின் கொடுக்கவில்லை . அப்படி எதுவும் செய்திராத 'கார்த்தி'க்கா இந்த கூட்டம் என்று மூக்கு மேல் விரல் வைத்து யோசித்தேன். பிறகு தான் புரிந்தது அந்த அன்பு உள்ளங்கள் வந்திருப்பது காவலன் திரைப்படத்திற்கு என்றும் தங்கள் வீரத்தை பரை சாற்றுவது தங்கள் தலைவனின் படத்தை வரவேற்பதற்கு என்றும் புரிந்துகொண்டேன்.

அந்த கும்பல் தொடர்ந்த கூச்சலிடுவதும் ஒருவரை ஒருவர் தள்ளி விடுவதும் சிரிப்பதும் துள்ளுவதுமாக ஒரே அமர்க்களம் செய்துகொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த ஒரு போலீஸ் எஸ்.ஐ. அவர்களை பார்த்து "டேய் அமைதியா நில்லுங்கடா" என்றார். அவர்கள் உடனே ஏதோ எக்ஸ்ட்ரா வீரம் வந்தவர்களை போல் இன்னும் சத்தமாக அவரை பார்த்து கத்த தொடங்கினார்கள். கூச்சல் இன்னும் அதிகமானது.

எஸ்.ஐ. பொறுமையாக ஒரு நிமிடம் நின்று பார்த்தார். ம்..ஹூம்... பிறகு மெதுவாக அவர்கள் அருகில் போனார். வரிசையில் நின்றிருந்த இளைஞர்களின் கன்னத்தில் பளார் பளார் என்று இரண்டு அப்பு அப்பினார். அப்படியே வரிசையாக இரண்டு மூன்று பேரை அடித்தார். அதற்குள் இன்னொரு போலீஸ் லட்டியோடு வந்தது. தட்ஸ் இட். கூட்டத்தில் ஏதோ ரகசிய தீர்மானம் போட்டது போல் அனைவரும் கப் சிப் என்று அமைதியாக வரிசையில் செட்டிலாகிவிட்டார்கள்.

இந்த சம்பவத்திலிருந்து நாம் அறிய வேண்டிய செய்தி ஒன்றிருக்கிறது.

இதே கும்பல் தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் அடியாட்களாக இருந்து ஒரு அரசியல் கூட்டத்தை காண வந்திருந்தால் போலீஸ் அத்தனை எளிதில் கை நீட்டுமா?

முறையான அனுமதி இல்லாமல் யாரையும் தொடத்தான் முடியுமா?.

இது தான் அரசியல் கட்சிக்கும் ரசிகர் மன்றத்திற்கும் இருக்கும் அதிகார சமன்பாடு.

இதை விட மட்டமான சம்பவம் ஒன்று என் வாழ்க்கையில் நடந்தது.

அது சிவாஜி திரைப்படத்தின் ஸ்பெஷல் ஷோ. வியாழன் இரவு ஒன்மது மணிக்கு.
திரையரங்கு இருக்கும் தெரு முழுக்க ரசிகர்கள். நாங்கள் ஒரு இருபது பேர் செல்வதாக இருந்தது.

இருபது பேரில் வெறும் ஐந்து பேர் மட்டுமே வந்திருந்தோம். தியேட்டர் கேட்டை பூட்டிவிட்டார்கள். போலீஸ் கேட் அருகில் நின்றுகொண்டு டிக்கெட் இருப்பவர்களை மட்டும் உள்ளே அனுமதித்துக்கொண்டிருந்தார்கள். அது ஒரு சுமாரான தியேட்டர் என்பதால் முன்னரே போய் சீட் பிடித்துவிட வேண்டும். இல்லையென்றால் முன் வரிசையில் அமர்ந்து படம் பார்க்கும் துன்பம் நேரக்கூடும். அதனால் வந்திருந்த நாங்கள் ஐந்து பேரும் முதலில் உள்ளே போய்விடுவதென தீர்மானித்தோம்.

சரியான கூட்டம். நகரவே இடம் இல்லை. இத்தனைக்கும் வெளியே நிற்கும் ஒருவரிடமும் டிக்கெட் கிடையாது. வெறுமனே வந்து குவிந்திருந்தார்கள். அவர்களை தள்ளிக்கொண்டு ஒரு வழியாக ஐந்து பேரும் கேட்டை நோக்கி நகர்ந்தோம். எங்களில் டிக்கெட் வைத்திருந்த நண்பர் முதலில் போனார். போலீஸ் அவரை மறித்தது. டிக்கெட் எடு என்றது. நண்பர் கொத்தாக இருபது டிக்கெட்டையும் ஒரு கவரில் போட்டு பத்திரமாக வைத்திருந்தார். அதை அப்படியே பேன்ட் பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து வெகுளியாய் அவரிடம் காண்பித்தார். போலீஸ் என்ன செய்தது தெரியுமா. உடனே அவனிடமிருந்து டிக்கெட்டை "காட்டு பார்க்கலாம்" என்று பிடுங்கி தன் பாக்கெட்டில் சொருகிக்கொண்டது.

நண்பர் என்ன ஏது என்று புரியாமல் திடுக்கிட்டார். சார் டிக்கெட்ட கொடுங்க என்றார். உடனே போலீஸ் லட்டிய கொஞ்சம் தூக்கி "உனக்கு எப்படி இத்தன டிக்கெட்டு கெடச்சுது நீ பிளாக்குல டிக்கெட் விக்கிற.... டிக்கெட் எல்லாம் கிடையாது போ" என்றது.

இத்தனைக்கும் எங்களை சுற்றி வெறித்தனமான முடியை கொண்டு வா என்றால் தலையையே கொண்டு வரும் வீராதி வீர வீர பராக்கிரம வல்லமை பொருந்திய ரஜினி ரசிகர் கூட்டம். என்ன பிரயோஜனம்? பிறகு நாங்கள் நான்கு பேரும் எப்படியோ தவழ்ந்து கேட்டை அடைந்த போது நண்பர் போலீஸிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். "சார் நான் ஒரு கம்பெனியில மேனேஜர் சார். நான் ஏன் பிளாக்குல டிக்கெட் விக்க போறேன்" என்றெல்லாம் அவரிடம் பரிதாபமாய் கெஞ்சவேண்டியதாயிற்று. போலீஸ் எதற்கும் அசரவில்லை. "நீ பிளாக்குல டிக்கெட் விக்கிற போயிடு இங்கேயிருந்து" என்று மிரட்ட ஆரம்பித்தார்.

எங்கள் நண்பர்களில் ஒருவருக்கு தியேட்டர் ஓனரின் மகன் நெருங்கிய நண்பர். அவர் மூலமாகத்தான் டிக்கெட் வாங்கியிருந்தோம். நல்லவேளையாக அவர் கேட்டுக்கு கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டிருந்தார். அவரை கை தட்டி அழைத்து விஷயத்தை சொன்னோம்.அவர் போலீஸிடம் "எங்க பிரண்ட்ஸ் சார், டிக்கெட்ட கொடுங்க" என்றார். உடனே போலீஸ் "எம்பா முன்னாடியே சொல்றதில்லையா? இதாப்பா டிக்கெட் என்று மரியாதையோடு எடுத்து கொடுத்தார்"

எல்லாவற்றையும் முன்னரே சொல்லிவிடவேண்டும் போலிருக்கிறது போலீசுக்கு. அப்பாவிகள் கிடைத்தால் வழக்கம் போல....அதே தான்...

ஒரு ரசிகனை விட ஒரு அரசியல் கட்சி தொண்டனுக்கு கூடுதல் மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வழி செய்கிறது இந்திய ஜனநாயகம். எனவே அடி மட்ட தொண்டனை விடுங்கள் (அவன் தியேட்டரில் கூவுவதோடு சரி) அதற்கு ஒரு படி மேலே போய் போஸ்டர் அடித்து ரசிகர் மன்றத்தில் ஏதாவது ஒரு பதவியில் இருக்கும் ரசிகனுக்கு அடிப்படையாகவே தன் தலைவன் கட்சி ஆரம்பித்து தான் ஒரு கட்சியின் உறுப்பினர் ஆகி அரசியல் அதிகாரத்தில் பங்கெடுக்கவேண்டும் என்கிற ஆசை கொஞ்சம் கொஞ்சமாக செல்ப் எடுக்கிறது.

அதனால் தான் ரசிகன் எப்போதும் தன் தலைவன் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று பிரியப்படுகிறான். ரஜினி ரசிகர்களும் அவர் கட்சி ஆரம்பிப்பார் என்று இன்றும் ஆவலோடு நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ரஜினி எப்போது கேட்டாலும் "நான் அரசியலுக்கு வருவதும் வராததும் ஆண்டவன் கையில் இருக்கிறது என்கிறார்". உண்மையில் ரஜினி "நான் அரசியலுக்கு வரமாட்டேன்" என்று அறிக்கை விட்டால் அதிகம் கொந்தளித்து போவது அவரது ரசிகர்கள் அல்ல. அவரை வைத்து படம் எடுப்பவர்கள் தான். காரணம் ரஜினியின் அரசியல் இமேஜை பொருளாதாரமாக மாற்றிக்கொண்டிருந்தவர்கள் அவர்கள். சமீபத்திய எந்திரன் விதிவிலக்கு.ரஜினியின் அரசியல் ஆசையை காட்டிக்காட்டியே அவரது படங்களை ஒரு கட்டத்தில் புரோமோட் செய்ய ஆரம்பித்தார்கள்.குறிப்பாக அண்ணாமலைக்கு பிறகு அது தீவிரப்பட்டது.

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை காசாக்கும் விதமாக ரஜினி திரைப்படங்களில் அரசியலை அல்லது தன் அரசியல் பிரவேசம் குறித்த சங்கதிகளை வெளிப்படையாகவே சேர்க்க ஆரம்பித்தார்கள். ரஜினியும் பிசினஸ் ஆகிறது என்பதால் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் யார்யாரோ ஏற்றி விட்ட அரசியல் ஹைப் ரஜினிக்கே ஒரு கட்டத்தில் தடுமாற்றங்களை உண்டு பண்ணியது நினைவிருக்கலாம்.

பிறகு சமகாலத்தில் ரஜினி, கலைஞரின் அருகில் ஒரு பொட்டி பாம்பாய் நெளிந்தபடி விழாக்களில் கலந்து கொள்வதும் கலைஞர் புகழ் பாடுவதுமாக பொழுதை கழிப்பது காலத்தின் -அரசியலின் - பொருளாதாரத்தின் - வளர்ச்சியின் - இருத்தலின் - வேறு வழி இல்லாமையின் - இயலாமையின் கட்டாயம்.

சரி விஜய் எங்கே தோற்றார் என்று பார்த்தால் ரஜினி தன் 45ஆவது வயதில் செய்யததை விஜய் தன் 30 வயதில் செய்ய நினைத்தார்.

ரஜினிக்கு தானாகவே ஒரு அரசியல் முகம் உருவானது. அதை ரசிகன் விரும்புகிறான் என்றவுடன் ரஜினியின் அரசியல் முகத்தை மேலும் மேலும் மெருகேற்றி அதைக்கொண்டு கல்லா கட்டினார்கள். பிறகு அந்த முகமே ரஜினிக்கு ஆப்பு வைக்கும் விதமாக மாறிவிட ரஜினி தன் இருப்பை காப்பாற்றிக்கொள்ள அவசர அவசரமாக அந்த முகமூடியை கழற்றி எறியவே ஆசைப்படுகிறார்.

ஆனால் விஜய்க்கு அப்படி அல்ல. அரசியல் முகமூடியை தானாகவே வலியப்போய் வாங்கி மாட்டிக்கொண்டார். அதன் மூலம் தன் படங்களுக்கு பொருளாதார ரீதியில் வெற்றியை கொண்டுவர முனைந்தார். அந்த முயற்சிகள் வெகு சீக்கிரத்தில் முறியடிக்கப்பட்டுவிட்டன. நிற்க. இதற்கு மேலும் விஜய் அரசியல் முகத்தோடு முட்டி மோதி ஜெய்த்து வெளிவரவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் சமகாலத்தில் அரசியல் முகம் பூண்ட விஜய் நிஜ அரசியல் முகங்களால் தோற்கடிக்கப்பட்டார் என்பது உண்மையே.

விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். சமகாலத்தில் ஒரு சூர்யாவையோ விக்ரமையோ தனுஷையோ வேறு ஒரு நடிகர் எளிதாக Replace செய்துவிட முடியும். ஆனால் விஜய் அப்படி அல்ல.

உதாரணம் சொல்லவேண்டும் என்றால். சூரியாவின் சிங்கம் திரைப்படத்தில் கார்த்தி நடித்தாலும் விக்ரம் நடித்தாலும் எடுபடும். ஆனால் காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தை இப்போது ரீமேக் செய்தால் விஜயை தவிர யார் நடித்தாலும் எடுபடாது.

இன்னொரு உதாரணம் விக்ரம் நடித்த ராவணன் திரைப்படத்தில் ஆர்யா நடித்திருந்தாலும் சூர்யா நடித்திருந்தாலும் எடுபடும். ஆனால் விஜய் நடித்த குஷி திரைப்படத்தை இப்போது ரீமேக்கினால் அவரை தவிர யாரும் அதை செய்துவிட முடியாது.
விஜய்யின் கில்லியை அதே பீலோடு கொடுக்க இன்று தமிழ்நாட்டில் எந்த நடிகரும் இல்லை.

இந்த உதாரணங்களை புரிந்துகொண்டவர்களுக்கு விஜய்யின் இமேஜ் புரியும்.

அதனால் விஜய் ரஜினியை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு களம் இறங்குவதை முதலில் விட்டொழிக்கவேண்டும். ரஜினியே திருந்திவிட்டார் பிறகு என்ன? விஜய் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உதிக்கும் சின்னச்சின்ன நடிகன் கூட ரஜினியைப் போல் வரவேண்டும் என்று தப்புத்தப்பான காரியங்களில் இறங்குவது படு முட்டாள்தனம். (கவனித்து பாருங்கள் சூர்யா இன்றுவரை இது போன்ற காரியத்தில் இறங்கியதில்லை. ஆனாலும் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக நிலைநிறுத்திக்கொள்கிறார். எப்படி?)

ரஜினியின் வெற்றிப்படங்கள் அமைந்த காலம் வேறு. அவர் அரசியலை தன் வியாபாரத்துக்கு பயன்படுத்திய காலகட்டம் வேறு. எனவே அவரை ஒரு முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு வீணாக கொடி ரிலீஸ் செய்வதும் அம்மாவை சந்திப்பதும் காங்கிரஸ்ஸில் சேருவேன் என்று திகிலூட்டுவதும் அவசியமில்லை. அதை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு ஒரு நடிகனாக விஜய் இந்நாள் வரை உழைத்து சேர்த்த ரசிகர்களையும் இமேஜையும் மட்டுமே முதலீடாகக்கொண்டு அடுத்தடுத்து நல்ல இயக்குனர்களையும் நல்ல கதையையும் தன் ரசிகர்களையும் மட்டுமே நம்பி படங்களில் நடித்தால் போதும். வெற்றி அவருக்கு தானகவே வந்து சேரும்.

பல தருணங்களில் அதிகார வர்க்கத்தோடு சினிமா கம்பிரமைஸ் செய்துகொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது. உங்கள் ரசிகர்களாகிய நாங்களே அதிகார வர்க்கத்தோடு காம்பிரமைஸ் செய்துகொண்டுதான் உங்கள் திரைப்படங்களை பார்க்கவேண்டியிருக்கிறது. சூர்யா தனுஷின் படவிழாவில் தான் தனுஷின் ரசிகன் என்று சொல்லியே ஆகவேண்டும். உண்மையில் சூர்யா தனுஷின் ரசிகனா என்று யாரும் சோதித்து பார்க்க போவதில்லை. அடுத்து அஜித் பட விழாவில் நான் அஜித்தின் தீவிர வெறியன் என்று சொல்லியாகவேண்டும்.

காரணம் அதிகார வர்க்கம் மெதுவாக ஊர்ந்து சினிமாவுக்குள் ஒரு அனகோண்டாவாக படுத்துக்கொண்டிருக்கும் காலம் இது. எனவே நடிகனாக பணம் பார்க்கவேண்டுமென்றால் சூத்திரம் தெரியவேண்டும். ரௌத்திரம் மட்டுமல்ல சாணக்கியத்தனமும் வேண்டும்.

இல்லையென்றால் ஒட்டுமொத்தமாக நடிப்பை துறந்துவிட்டு அரசியலில் குதிக்கலாம். அதைவிட்டுவிட்டு ரஜினியை போல் அரசியல் பூச்சாண்டி காட்டி கல்லா கட்டுவதென்பது இனி மேலும் கதைக்காகாது.

நடிப்பது உங்கள் தொழில் அதை சீரும் சிறப்புமாக செய்யுங்கள். எங்கள் ரசனைக்கு தீனி போடுங்கள். நாங்கள் உங்களுக்கு சன்மானம் கொடுக்கிறோம். நிறைய சம்பாதியுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள் என்றெல்லாம் நாங்கள் கேட்கமாட்டோம். சம்பாதித்து நீங்களே அனுபவியுங்கள். ஆனால் வீணாக ரசிகனை உசுப்பேற்றி பத்து வருட சம்பாத்தியத்தை பத்தே மாதத்தில் எடுத்துவிடலாம் என்று கனவு கண்டால் ரசிகர்கள் இனிமேலும் வாயில் விரல் வைத்து சப்பிக்கொண்டிருக்கமாட்டார்கள்.

கூடுதல் சிரிப்பு : காவலன் திரைப்படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டது குறித்து விஜய் ரசிகர்கள் போலீசில் புகார் செய்தார்களாம். காவல் துறை வழக்கு பதியுமா? பதித்தால் யாரை கைது செய்வது. ஒரு வேளை அ.தி.மு.க. ஆர்ப்பட்டம் நடத்தி வழக்கு பதிந்தாலும் சுற்று வட்டாரத்திலுள்ள ஆடு மாடுகள் போஸ்டர்களை தின்றுவிட்டதாக கேஸை மூடிவிடமாட்டார்களா?

21 comments:

RVS said...

அனாலிசிஸ் அட்டகாசம். யாராவது விஜய்யின் அகில உலக தலைமை ரசிகர் மன்றத்துக்கு அனுப்பி வைங்கப்பா!! ;-)

Katz said...

;-)

புருனோ Bruno said...

அசத்தல் அனாலிசஸ் சார் :) :)

நல்ல இடுகைக்கு நன்றியும், வாழ்த்துக்களும்

Galeel said...

Good analysis.. keep it up..
As said by other visitor, please Fwd this to Vijay's fan club head.

Jayadev Das said...

அடடே, இத்தனை நாளாய் புரிந்துகொள்ளாமல் இருந்த சங்கதியாய் இருக்கிறதே! இவரு ரஜினியை காப்பியடிப்பருன்னு தெரியும், இந்த //ரஜினியை போல் அரசியல் பூச்சாண்டி காட்டி கல்லா கட்டுவதென்பது// Angle- ல் பார்க்கத் தவறிவிட்டேன். காவலன் படத்தில் கூட எந்திரன் படத்தைப் போல, அட்டகாசமான/ஆர்ப்பாட்டமான ஓபனிங் சீன்[Introduction] இல்லை, பத்து நிமிஷத்துக்கு ஒரு பன்ச் டயலாக் இல்லை, ரோபோ மாதிரியே அசின் வகுப்பறைக்கு இவரு போய் மிலிடரி காரன் மாதிரி நின்னுகிட்டு பேசுறாரு. இப்படியெல்லாம் காப்பியடிக்கிரவரு அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதை வருமானத்தைப் பெருக்கப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது புலப்படாமல் போனது. தெளிவு படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் அதுவே இப்போது இவருக்கு ரிவிட் அடிக்கிறது. ஒற்றை ஆளாக அம்பது ரவுடிகளைப் பந்தாடுவது முழு சென்னையையுமே ரவுடிகளே இல்லாமல் பண்ணி தங்கையை வாழ வைப்பது எல்லாம் சினிமாவில்தான், நிஜத்தில் மண்டியிடுவதைத் தவிர வேறு வழியே இல்லை.

Jayadev Das said...

அடடே, இத்தனை நாளாய் புரிந்துகொள்ளாமல் இருந்த சங்கதியாய் இருக்கிறதே! இவரு ரஜினியை காப்பியடிப்பருன்னு தெரியும், இந்த //ரஜினியை போல் அரசியல் பூச்சாண்டி காட்டி கல்லா கட்டுவதென்பது// Angle- ல் பார்க்கத் தவறிவிட்டேன். காவலன் படத்தில் கூட எந்திரன் படத்தைப் போல, அட்டகாசமான/ஆர்ப்பாட்டமான ஓபனிங் சீன்[Introduction] இல்லை, பத்து நிமிஷத்துக்கு ஒரு பன்ச் டயலாக் இல்லை, ரோபோ மாதிரியே அசின் வகுப்பறைக்கு இவரு போய் மிலிடரி காரன் மாதிரி நின்னுகிட்டு பேசுறாரு. இப்படியெல்லாம் காப்பியடிக்கிரவரு அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதை வருமானத்தைப் பெருக்கப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது புலப்படாமல் போனது. தெளிவு படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் அதுவே இப்போது இவருக்கு ரிவிட் அடிக்கிறது. ஒற்றை ஆளாக அம்பது ரவுடிகளைப் பந்தாடுவது முழு சென்னையையுமே ரவுடிகளே இல்லாமல் பண்ணி தங்கையை வாழ வைப்பது எல்லாம் சினிமாவில்தான், நிஜத்தில் மண்டியிடுவதைத் தவிர வேறு வழியே இல்லை.

Cable Sankar said...

kalakkure visa...

KVR said...

அருமை

ttpian said...

தமிழன் என்று சொன்னால்தான் உதடுகள் ஓட்டும்:
இந்தியன் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது

MSATHIA said...

வித்தியாசமான பார்வே. அருமையான மதிப்பீடு.

Anonymous said...

ithuthaan unmaiyilaye velai illaathavan seyal.

Dhanasekar S said...

Any Vijay film can be easily made with any other actor, the said films of Vijay were remakes.
Apart from that point really interesting post.
-Dhanasekar S

saran said...

uankku support panravan ellam unna mathiri blogger vachukittu....otta coputerla oorvambu ilukiravanugathaan....athaan unna aga oogo naranunga..appathan nalaiki ivan yethavathu olaruvan neeum supermba...pongada muttaa passangala...

மாணவன் said...

தெளிவான பார்வையுடன் நச்சுன்னு சொல்லியிருக்கீங்க சார்

சேலம் தேவா said...

//கலைஞர் புகழ் பாடுவதுமாக பொழுதை கழிப்பது காலத்தின் -அரசியலின் - பொருளாதாரத்தின் - வளர்ச்சியின் - இருத்தலின் - வேறு வழி இல்லாமையின் - இயலாமையின் கட்டாயம்.//

சூப்பர் வரிகள் எழுத்தாளரே..!!

VISA said...

//saran said...
uankku support panravan ellam unna mathiri blogger vachukittu....otta coputerla oorvambu ilukiravanugathaan....athaan unna aga oogo naranunga..appathan nalaiki ivan yethavathu olaruvan neeum supermba...pongada muttaa passangala...

//

சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா.....

செமயா சிரிக்க வச்சிட்டேள் போங்கோ.

சி.பி.செந்தில்குமார் said...

sema செம போஸ்ட் சார்

சிவகுமார் said...

>>> இதற்கே இந்த கலவரம் என்றால் எங்க தல ரித்தீஷ் படம் வந்தா டோட்டல் டமில்நாடே டரியல் ஆயிடும் போல!!

சே.குமார் said...

viththiyaasamaana pakirvu...

Rettaival's said...

ஆனால் காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தை இப்போது ரீமேக் செய்தால் விஜயை தவிர யார் நடித்தாலும் எடுபடாது.

இன்னொரு உதாரணம் விக்ரம் நடித்த ராவணன் திரைப்படத்தில் ஆர்யா நடித்திருந்தாலும் சூர்யா நடித்திருந்தாலும் எடுபடும். ஆனால் விஜய் நடித்த குஷி திரைப்படத்தை இப்போது ரீமேக்கினால் அவரை தவிர யாரும் அதை செய்துவிட முடியாது.
விஜய்யின் கில்லியை அதே பீலோடு கொடுக்க இன்று தமிழ்நாட்டில் எந்த நடிகரும் இல்லை.
/////////////////////////////////////////////////////////////////////


பாஸ்...முடியலை...!
இதை விஜய்கிட்டா சொன்னா விஜயே மூனு நாள் வாய்விட்டு சிரிப்பார்!

அடிங்க... ஆனா கையை கழுவிட்டு அடிங்க!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//(கவனித்து பாருங்கள் சூர்யா இன்றுவரை இது போன்ற காரியத்தில் இறங்கியதில்லை. ஆனாலும் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக நிலைநிறுத்திக்கொள்கிறார். எப்படி?)//
சூரியாவுக்குக் கிடைத்த அப்பா, விஜய்க்குக் கிடைக்கவில்லையே!
இவரைப் பெற்றவரே...இவருக்கு சந்தனப்பொட்டுவைத்து; மாலைபோட்டு பலியிட முற்பட்டுவிட்டரே!
விதி யாரை விட்டது.

 
Top Tamil Blogs by Tamilers