Tuesday, April 5, 2011

வப்பாட்டிகளை விலைக்கு வாங்கி....





DISC: இது முழுக்க முழுக்க கற்பனையே. ஆனால் யாரோ ஒருவரை குறிப்பதாக இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

நினைவலைகள்.ஜனவரி 10 2050,சென்னை

அது 2016 சட்டமன்ற தேர்தல் என்று நினைக்கிறேன். அப்போது தமிழகத்தில் இரண்டு மாபெரும் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன.

கட்சி 1 - அ.பா.ஏ.சோ.வ.க. - அகிலமாளும் பாட்டாளி ஏழை சோற்றுக்கு வழியில்லாதோர் கட்சி

கட்சி 2 - சோ.வ.இ.ம.அ.ச.ஆ.அ.க. சோத்துக்கு வழி இல்லையென்றாலும் மக்கள் அண்ட சராசரங்கள் ஆளும் அதகள கட்சி (சுருக்கமாக சோத்துக்கட்சி, சோ.க.)

இந்திய வரலாற்றில் முதல் முறையாக 2016 தேர்தலின் போது தான் உதிரி கட்சிகளுக்கு தட்கல் முறையில் சீட்டுகள் வழங்கும் திட்டத்தை பெரும் கட்சிகள் அறிமுகப்படுத்தின. அதற்கு முந்தைய தேர்தலில்(2011) R.A.C முறையை தங்கபாலுவும் அவரது மனைவியும் சேர்ந்து அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

2016 தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம் அப்போதைய முதல்வரின் குலக் கொளுந்து ஒன்று விடுமுறைக்கு சென்னையை சுற்றிப்பார்க்க வந்திருந்தது. குலக்கொளுந்து பிறந்து வளர்ந்ததெல்லாம் லண்டனில். குலக்கொளுந்து ஏப்ரல் மாத விடுமுறைக்கு வந்த போது தமிழகத்தில் தேர்தல் நடப்பதாக தெரியவர தேர்தல் என்றால் என்னவென்று தலைவரை ஒரு பிடி பிடித்துவிட்டது. தலைவரும் பொறுமையாக 234 சீட்டு ஆடும் தேர்தல் குறித்த விளக்கத்தை தர குலக்கொளுந்து குஷியாகிவிட்டார்.

"ஏம்பா இந்த சீட்டாட்டம் சோக்க இக்குதுப்பா. நானும் லண்டன்ல எவ்வளவோ கேசினோல விளாண்டிருக்கேன் சீட்டாட்ட கிளப்புல புரண்டிருக்கேன்... ஆனா இப்படி ஒரு த்ரில்லிங்கான விளையாட்ட நான் பாத்ததே இல்லையே. லண்டன்ல ஒரு கிளப். அங்ஙனக்க ஒரு பொண்ண மல்லாக்க படுக்க வச்சு அது வயித்துல சீட்டு கட்ட அடுக்கி வச்சு ஒண்ணு...ஒண்ணா ...ஒண்ணு...ஒண்ணா தடவி தடவி எடுத்து விளையாடுவோம். குஜாலான ஆட்டம் அது.... அத்த விட இந்த தேர்தல் வெளாட்டு மஜாவா இக்குதுப்பா" என்று குலக்கொளுந்து இந்திய ஜனநாயகம் குறித்த புரிதலை குஜாலாக வெளிப்படுத்தியது .

அத்தோடு நின்றுவிடாமல் மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக தேர்தலில் தானும் போட்டியிட விரும்புவதாக ஒரு குண்டை தூக்கி போட குலக்கொளுந்தின் விளையாட்டு ஆசையை கருத்தில் கொண்டு சேப்பாக்கம் தொகுதியை ஒதுக்குவதென்று பொதுக்குழு கூடி முடிவெடுத்தது. சேப்பாக்கம் தொகுதியில் தான் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்திருக்கிறதென்பது கூடுதல் சிறப்பு. அதே தொகுதியில் ஐந்து முறை ஜெயித்த சட்டமன்ற உறுப்பினர் முதுமலை காட்டுப் பகுதிக்கு தூக்கி வீசப்பட்டார்.

முன்பெல்லாம் தேர்தல் என்றால் புதிதாக வெள்ளை அடித்து வைத்திருக்கும் சுவற்றில் கட்சி சின்னத்தை ராவோடு ராவாக வேட்டியை தூக்கி கக்கா போவது போல் பேண்டு வைத்துவிட்டு போய்விடுவார்கள். எங்காவது சுவர்கள் காலியாக இருந்தால் தங்கள் கட்சி பெயரை வெள்ளை பெயின்டில் எழுதி அட்வான்ஸ் புக்கிங் செய்யும் முறையும் அமலில் இருந்தது. அதை முற்றிலும் ஒழித்த பெருமை தேர்தல் கமிஷனையே சாரும்.

ஒரு முறை பப்ளிக் டாயிலெட்டின் வெளிச்சுவர் காலியாக இருந்திருக்கிறது. செக்கண்ட் ஷோ சினிமாவுக்கு போய்விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த கட்சியின் அடி மட்ட தொண்டன் அதை கவனிக்கிறான். ஆர்வம் மேலோங்க உடனடியாக தன் கட்சி பெயரை அதில் சாக்பீசில் ஆங்கிலத்தில் எழுதி வைத்து சுவற்றை அட்வான்ஸ் புக்கிங் செய்துவிடுகிறான். ராவோடு ராவாக கட்சி சின்னத்தையும் வரைந்துவிடுகிறார்கள். அடுத்த நாள் காலை கக்கா போக வந்த பொது ஜனம் இது பப்ளிக் டாயிலெட்டா இல்லை கட்சி அலுவலகமா என்று குழம்பிப்போனது தான் காமெடி.

சுவர் விளம்பரங்களுக்கு அடுத்ததாக தேர்தலில் களை கட்டுவது தேர்தல் பிரசாரம்.
2011 ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, ஆதித்யா சிரிப்பொலி போன்ற நகைச்சுவை டி.வி. சேனல்களின் டி.ஆர்.பி சரிந்ததும் சன் நியூஸ் ஜெயா நியூஸ் போன்ற செய்தி சானல்களின் டி.ஆர்.பி எகிறியதும் குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் கூட கார்ட்டூன் நெட்வொர்க்கை துறந்துவிட்டு கேப்டன் டி.வி. பார்க்க கிளம்பியதும் அதுவே முதல்முறை.

2011 தேர்தல் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களுக்கு நல்ல தீனி.

2016 தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த கணமே பிரசாரம் சூடு பிடிக்கத்தொடங்கியது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பது 2011ஐ போல் 2016லும் தொடர்ந்தது. ஊழலை மறைக்கவும் மக்களின் அன்றாட திண்டாட்டங்களை மறைத்து, அவர்களை குஷி படுத்தும் விதமாக காமெடி நடிகர்களை களத்தில் இறக்குவது ஒரு டிரெண்டாகவே இருந்துவந்தது. ஹீரோக்கள் முதலமைச்சராக போட்டி போட காமெடி நடிகர்கள் பிரசாரம் செய்ய கதாநாயகி தேர்தல் அறிக்கையாக வர அங்காங்கே வில்லன் நடிகர்கள் தேர்தலில் கலக்க ஒரு முழு நீள திரைப்படம் பார்த்த உணர்வை பொதுமக்களுக்கு தேர்தல்கள் அளிக்கத்துவங்கின.

இதன் காரணமாகவோ என்னவோ தேர்தல் சமயங்களில் அதிக அளவில் திரைப்படங்கள் வெளிவருவதில்லை.

2016 தேர்தலில் மிகவும் வினோதமான ஒரு பிரசார யுத்தி கையாளப்பட்டது. அது தான் வப்பாட்டி பார்முலா.

காமெடி நடிகர்கள் ஒரு அளவுக்கு தான் ஜொலிக்கிறார்கள். எதிராளி குடிகாரன் மொள்ளமாரி முடிச்சவிக்கி என்று தனிமனித தாக்குதல்களை இந்த காமெடி நடிகர்களால் ஒரு அளவுக்கே வழங்க முடிந்தது. "தோனி தான் கேப்டன். கப்பலில் வருபவர் தான் கேப்டன்." என்று மேடைகளில் முழங்கியது ஒரு புயல். அதே சமயம் ஓங்கி உயர்ந்த மரங்களை சாய்த்து வீழ்த்துவதும் குடிசைகளின் கூரையை அலேக்காக தூக்கி எறிவதுமாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையோடு வருவது தான் 'புயல்' என்ற பேருண்மை "வைகைப் புயல்" என தன்னை அழைத்துக்கொள்ளும் அந்த காமெடி நடிகருக்கு 2011ல் புரியாமல் போனதும் ஒரு வகை நகைச்சுவை காட்சி தான்.

ஒரு வேட்பாளின் வெளிப்புற குணாதிசயங்கள் மட்டுமே தெரிந்த ஒரு காமெடி நடிகரால் பெரிய அளவில் பிரசாரத்தில் எதிராளியை டேமேஜாக்க முடியவில்லை. என்னதான் காமெடி ஆக்ஷன் இருந்தாலும் கிளுகிளுப்பு குறைவு என்று மக்கள் வருத்தப்பட்டார்கள்.

எனவே மக்களின் கவர்ச்சி தாகத்துக்கு தண்ணி ஊற்றும் விதமாகவும் கொதிக்கும் ஊழலை பொசுக்கும் விதமாகவும் 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது தான் வப்பாட்டி பார்முலா?

நமக்கு எப்போதுமே அடுத்தவரின் படுக்கையறை ரகசியங்களை தெரிந்துகொள்வதில் இருக்கும் அலாதி ஆர்வம் தான் இந்த பார்முலாவின் அடிநாதம். வெறும் காமெடி நடிகர்களை வைத்து பிரசாரம் செய்வதை விட எதிர் வேட்பாளரின் படுக்கை அறை வரை பரிச்சயம் உள்ள ஒருவர், எதிரணி வேட்பாளரின் அந்தரங்கத்தை நார் நாராக டார் டாராக கிழித்து தொங்க விடுகிற போது பல கோடி ஊழல்களின் துர்நாற்றமும் நில அபகரிப்பின் , அராஜகத்தின் விஷநாற்றமும் கோமணத்தின் முடை நாற்றத்தில் அடங்கிவிடும் அல்லவா?

எனவே கட்சிகள் 2016 தேர்தலில் பிரதான கட்சிகள் வப்பாட்டி பார்முலாவை கையாண்டார்கள்.

இதை முதலில் ஒரு தொகுதியில் தொடங்கினார்கள். தொகுதியில் சோத்துக்கட்சி வேட்பாளரும் உலகக்கட்சி வேட்பாளரும் போட்டியிட்டார்கள். இரண்டு கட்சி மீதும் மக்கள் அதிர்ப்தியில் இருந்தார்கள். உலகக்கட்சிக்காரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? சோத்துக்கட்சி வேட்பாளரின் வப்பாட்டி வீட்டுக்கு தூது அனுப்பினார்கள். இருபது கோடி என்று விலை பேசினார்கள். "அந்தாளோட இத்தன வருஷம் இருந்தும் இப்படி ஒரு அமவுன்ட பாத்ததில்லையே" என்று பொங்கி எழுந்த தாய்க்குலம் கூந்தலை வாரி முடிந்து பிரசாரத்திற்கு புறப்பட்டது.

முதல் நாள் பிரசார பொதுக் கூட்டத்தில் கட்சி தலைவரின் அருகில் மேடையிலேயே வப்பாட்டி அமர்த்தப்பட்டாள். வப்பாட்டியின் கன்னிப்பேச்சு இதோ.

அந்த தொகுதியின் வேட்பாளர் பெயர் வின்னர் வீராசாமி.

- அந்தாளுக்கு யாரும் ஓட்டு போடாதீங்க. யாருய்யா வின்னர்? அந்தாளு வின்னரா? சிக்ஸ் அடிச்சு கப் வாங்குறவன் வின்னரா தினமும் செக்ஸ் வச்சு சீரழியுறவன் வின்னரா?

(மக்கள் கரகோஷங்களை எழுப்புகிறார்கள்)

- அந்தாளு கோமணத்த ஒரு நாள் கூட தொவச்சதில்ல. அந்தாளு கோவணத்த நீ பாத்திருக்கியா? நீ பாத்திருக்கியா? நீ...நீ...(மக்களை நோக்கி கேள்வி எழுப்புகிறார்.கட்சியின் கொள்கை புத்தகத்தை படித்திராத மக்கள் பாவம் பெபெப்பே என முழிக்கிறார்கள்). அவன் கோவணத்த பத்தி எனக்கு தான் நல்ல தெரியும். இப்படிப்பட்ட ஒருத்தனுக்கு நீங்க ஓட்டு போட்டா ஊருல எவனும் கோவணாத்த தொவச்சு போடக்கூடாதுன்னு சட்டம் கொண்டுவருவான். அவனுக்கு ஓட்டு போடாதீங்க.(மக்கள் எக்காள சத்தத்தோடு ஆர்ப்பரிக்க சிறப்பு நிகழ்ச்சிக்காக சானல் காரர்கள் வளைய வளைய வீடியோ எடுக்கிறார்கள்.)

- அந்தாளுக்கு புடவை கட்டினா தான் மூடு வருமாம்.(தண்ணி குடித்துக்கொள்கிறார்) இன்று உலக அரங்கிலே....பெண் விடுதலைக்காக போராடிய குஷ்பு பிறந்த இந்த மண்ணிலே பெண்கள் சுடிதார் நைட்டி ஸ்கர்ட் மினிஸ்கர்ட் ஜீன்ஸ் என எது அணிந்தாலும் ஆண்கள் முழு மூடோடு அவர்களை சுற்றி வரும் இந்த தருணத்திலே புடவை கட்டி வந்தால் தான் மூடு வரும் என்று சொல்லும் பிற்போக்குவாதியான இந்த வின்னர் வீராசாமியை நீங்கள் ஆதரிக்கலாமா? (மக்களின் முகத்தில் எகிப்து புரட்சியின் எழுச்சி தென்படுகிறது.)

- அப்பளத்த கடாயில போட்ட எப்படி மொருமொருன்னு உப்பலா பொரியுது. அப்படி அப்பளத்த பொரிச்சு தள்ளுற கோல்டு வின்னரா? இல்ல இந்த வீராசாமி வின்னரா?

(மக்கள் அம்மையாரின் கொள்கை முழக்கத்தில் திக்குமுக்காடி போகிறார்கள்.)

- அந்தாள பத்தி எனக்கு தான் தெரியும். அந்தாளு இரத்திரியில எங்கெங்க கை வைப்பான் எப்படி எல்லாம் டைப் டைப்பா முழிய மாத்துவான் எல்லாம் எனக்கு தான் தெரியும். ஏன்னா நான் தான் அவனோட வப்பாட்டி. மக்களே என்னை ஏமாத்திடலாம் உங்கள ஏமாத்த முடியுமா? படுத்துட்டு குடிக்கிறவன் வின்னரா? இல்ல குடிச்சிட்டு படுக்குறவன் வின்னரா? மக்களே நீங்க தான் தீர்ப்பு சொல்லணும். இந்த தேசத்தோட தலையெழுத்த மாத்துற சக்தி உங்களுக்கு தான் இருக்கு. அதனால இந்த தங்கச்சி....நான் யாரு உங்களுக்கு...உங்க வயத்துல பொறக்கலேன்னாலும் உங்களுக்கு நான் அக்க தங்கச்சி மாதிரி இல்லையா? உங்க பொண்ணா நெனச்சு ஓட்டு கேக்குறேன். என்ன நிறைய பேரு போன்ல மிரட்டுறாங்க. இப்போ இங்கே சொல்றேன். என் கற்புக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சு அதுக்கு தேர்தல் கமிஷன் தான் பதில் சொல்லணும்.

- வின்னர் வின்னருன்னு சில பேரு சொல்லிகிட்டு வருவான். நம்பிடாதீங்க. மூணு சீட்டுல கூட அந்தாளு வின் பண்ணதில்ல. அதனால கண்ட கண்ட வின்னர நம்பி ஏமாறாம ஓட்ட நம்ம ஐயாவுக்கு போட்டு மேட்டர கறந்துகோங்க. அம்புட்டுதேன்.

அதிரடி...அதிரடி....

அதே போல் உலகக்கட்சி வேட்பாளரின் வப்பாட்டி பெங்களூரில் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கேயே போய் விலை பேசி கூட்டி வந்தார்கள். இப்படி இரண்டு வேட்பாளர்களின் வப்பாட்டிகளால் பிரசாரம் சூடு பிடித்தது.

மக்கள் இரண்டு வப்பாட்டிகளின் பேச்சையும் கேட்டு எந்த வப்பாட்டியோட படுத்தவனுக்கு எதிரா ஓட்டு போடுவதென்று குழம்பிப் போனார்கள்.

இப்படி 2011ல் காமெடி நடிகர்களை வைத்து களைகட்டிய ஜனநாயகத் திருவிழா 2016ல் வப்பாட்டிகளை வைத்து குத்தாட்டம் போட்டதென்று சொன்னால் அதில் இந்திய துணை கண்டத்திற்கும் அமெரிக்க ஏகாதியபத்தியத்திற்கும் வியப்பேதும் இருக்காது என்று நம்புவோமாக.

நடிகை(எதிர்பார்க்கப்படும் வருங்கால பாராளுமன்ற உறுப்பினர்): என்னைப் போல் குழந்தை வேண்டுமென்றால் தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்க.

பொது ஜனம்: உன்ன மாதிரி குழந்த வேணுமுன்னா முதல்ல உன்ன தான் போ....போ...போ....போனா போகுதுன்னு நம்பி தி.மு.க.வுக்கே ஓட்டு போடறோம்.

14 comments:

bandhu said...

கொஞ்சம் முன்னாலே இந்த ஐடியா குடுத்திருக்கக்கூடாதா? இந்த தேர்தலிலேயே இதை ட்ரை பண்ணியிருப்பார்களே! இப்ப கூட லேட் இல்லன்னு நினைக்கிறேன்..

Rettaival's said...

Class Maame!

ப்ரியமுடன் வசந்த் said...

//அதே தொகுதியில் ஐந்து முறை ஜெயித்த சட்டமன்ற உறுப்பினர் முதுமலை காட்டுப் பகுதிக்கு தூக்கி வீசப்பட்டார். //

:-))))) ROTFL

superb..

ILLUMINATI said...

அதிருது மச்சி... :)

Jey said...

ஹஹஹா, இப்படி நடந்தாலும் ஒன்னும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை....

Kamalakkannan said...

Excellent visa !!!!

திருவாரூர்காரன் said...

Its a real fucking article..!

VISA rocks..! :)

கே. ஆர்.விஜயன் said...

பொது ஜனம்: உன்ன மாதிரி குழந்த வேணுமுன்னா முதல்ல உன்ன தான் போ....போ...போ....போனா போகுதுன்னு நம்பி தி.மு.க.வுக்கே ஓட்டு போடறோம்.//
இரண்டில் எதைப்போட்டாலும் நாசமா போகப்போறது உறுதி.

sakthi said...

விசா சும்மா அதிருதுல்ல :)

கலக்கறேள்

udhavi iyakkam said...

"நடிகை(எதிர்பார்க்கப்படும் வருங்கால பாராளுமன்ற உறுப்பினர்): என்னைப் போல் குழந்தை வேண்டுமென்றால் தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்க.

பொது ஜனம்: உன்ன மாதிரி குழந்த வேணுமுன்னா முதல்ல உன்ன தான் போ....போ...போ....போனா போகுதுன்னு நம்பி தி.மு.க.வுக்கே ஓட்டு போடறோம்."

Massive Attack
But too Bad

RVS said...

எவ்ளோ டிப்ஸ் கொடுத்துருக்கீங்க. ஏம்பா அரசியல் ஏழைங்களா.. தல சொல்றதை கேட்டு முன்னேருங்கப்பா..
சூப்பெர்ப் ஒன். ;-))

ரோஸ்விக் said...

தக்காளி நீர் பெரிய ஆளுதாம் ஒய் :-))))

பாரதசாரி said...

// குழந்தைகள் கூட கார்ட்டூன் நெட்வொர்க்கை துறந்துவிட்டு கேப்டன் டி.வி. பார்க்க கிளம்பியதும் அதுவே முதல்முறை. //
அதிரடி சரவெடி... அடுத்த முதல்வர் நீங்க தான் விசா :-)

Anonymous said...

Oh... my... god!!!

போட்டுத் தாக்கிட்டேள் போங்கோ.

2016ல என்னத்துக்கு? 2014-லயே பயன்படுத்திக்கலாமே?

 
Top Tamil Blogs by Tamilers