
சமீப காலமாய் "ஜில்லா விட்டு ஜில்லா வந்த" என்றொரு பாடலை ஒரு அம்மையார் அடிக்கடி டி.வி.யில் வந்து பாடுகிறார். சுண்டி இழுக்கும் அந்த குரலும் பாடலின் இடையிடையே வரும் பீஜியமும் மனதை ஈர்க்கிறது. "தலை நிறைய கனகாம்பரம் துட்டிருந்தா ஒதுக்குப்புறம்" என்ற ரீதியில் மங்கிய இருட்டில் பெண்கள் ஆடுவது கூடுதல் சிறப்பு. ஒய்யாரமான மெட்டில் குளிர்ச்சியான கடற்கரை காற்றோடு கலந்து சோகத்தை ஒரு வித எள்ளலோடு, குழந்தைக்கு கதை சொல்லும் தொனியில் வரும் அந்த பாடல் தெம்மாங்கோடு கலந்த மைல்டான கும்மாங்குத்து.
ஒரு ஜன்னலோர ரயில் அனுபவத்தை போல் சீராக சென்றுகொண்டிருக்கும் பாடல் "சுகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்குது பாரய்யா" என்று அம்மையார் கெஞ்சுகிறபோது தடாலென தடம் புரண்டு குப்புற படுத்து குபீராகிறது.
பாடலின் இறுதியில் இந்த வரிகளை கேட்ட பிறகோ என்னமோ படத்தில் ஒருவர் 'குவேய்' என்று வாந்தி எடுக்கிறார்.
வரிக்குவரி "நான் இப்படிதான்யா" என்று தன் இருப்பை கம்பீரமாய் வெளிப்படுத்தும் அந்த அம்மையார் இறுதியில் "சு.வி.பொ.ம.இ.பா" (அம்மா... தாயே...) என்று கெஞ்சும் போது தன் கம்பீரத்தையும் தன் மீது தனக்கிருக்கும் அடிப்படை அகங்காரத்தையும் இழந்து நிர்மூலமாய் தெரிகிறார். தன் உடலை ஒரு பிச்சைப்பாத்திரம் போல் வளைத்து "அய்யா பிச்சை போடுங்கய்யா" என்று பிச்சை எடுப்பதற்கு சமமான ஒரு அவமானம் தான் அந்த வரிகள்.
சுகத்தை விற்கும் பெண்ணிடம் எதற்காக மனதை பார்க்கவேண்டும் என்பது எனக்கு புரியவேயில்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு மனதை பார்த்துவிட்டு வரவா நாம் அங்கு போகிறோம். சுகத்தை விற்கும் பெண்ணிடம் சுகத்தை மட்டுமே பார்ப்பது வியாபார மனப்பான்மை என்று சிலர் பொங்கக்கூடும். ஆனால் நீ எப்போது சுகத்துக்கு பணம் கொடுக்க துணிந்தும் அவள் சுகத்துக்கு பணம் வாங்க துணிந்தும் விட்டாளோ அப்போதே வியாபார ஒப்பந்தம் முடிந்துவிட்டது. பிறகு எதற்கு மனதை பார் மாங்கல்யத்தை பார் என்ற வீணான சென்டிமென்ட் கோஷம் என்று தான் எனக்கு புரியவில்லை.
ஒருவர் சிக்கன் வாங்க கடைக்கு போய்விட்டு "அய்யோ சிக்கனே ...உன்னை கொல்கிறார்களே ......உயிரை கொடுக்கும் சிக்கனுக்கும் மனசிருக்குது பாரய்யா " என்று உச்சு கொட்டிவிட்டு "நல்ல லெக் பீஸா போடுப்பா" என்று வாங்கி கேட்டு கடித்து துப்பும் கிராதகனாக தமிழன் இருப்பது வேதனை அளிக்கிறது. Double Standards.
"சுகத்த விக்கிற பொண்ணுக்கு மனசிருக்குது பாரய்யா" என்ற படு கேவலமான வரியை எழுதியவர் நிச்சயம் பச்சைத் தமிழராகத்தான் இருக்கவேண்டும். காரணம் தமிழனுக்கு மட்டும் தான் எவரையும் பரிதாபமாய் பார்க்கும் பழக்கமுண்டு.
மேலும் ஒரு பாலியல் தொழிலாளியை இரக்கத்தோடு பார்க்கவேண்டிய அவசியம் என்ன? உலகில் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு நாட்டிலும் விபசாரியை பரிதாபமாக பார்க்கும் பழக்கம் இருக்கிறதா என்பது சந்தேகமே. ஒரு தனி மனிதன் உணவுக்காகவும் உடைக்காகவும் தன் இன்னபிற சுக போகங்களுக்காகவும் தன் உடலை விற்பதற்கு அவனுக்கு முழு உரிமை இருக்கவேண்டும். என் உடல் மேல் எனக்கே உரிமை இல்லை என்று சொல்ல எந்த கொம்பனுக்கும் அருகதை இல்லை. தனிமனித உரிமை என்பதே இது தான்.
பாலியல் தொழிலாளியை இரக்கத்தோடு பார்த்தே தீருவேன் என்று நீங்கள் முடிவெடுத்திருந்தால் இரக்கப்படலாம். யார் என்றால் அவளோடு வியாபார ஒப்பந்தம் செய்யாத ஒருவன் அவளை இரக்கத்தோடு பார்க்கலாம். அவளுக்கு பணம் கொடுத்தும் அவளை தொடாமல் அவளோடு அன்பாக ஆதரவாக உரையாடிவிட்டு முற்றும் துறந்த முடியாத முனிவராய் வருபவன் அவளை இரக்கத்தோடு பார்க்கலாம். பணமும் கொடுத்து சுகமும் அனுபவித்துவிட்டு பிறகு அவளை இரக்கத்தோடு பார்க்கவேண்டும் என்பது அவள் மீது சிறுநீர் கழிப்பதற்கு ஒப்பான செயல் அல்லவா?.
ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் தள்ளுவது எத்தனை கொடூரமானதோ அதே போலத்தான் ஒரு பெண் தன் உடலை விற்று பிழைக்கிறாள் என்பதற்காக அவள் மீது பரிதாபப்படுவதும். அவளை வேறாக பார்ப்பதும், அவளை சமுதாயத்திலிருந்து விலக்கி வைப்பதும் "அவளுக்கும் மனசிருக்கு பாரய்யா பாரய்யா" என்று பச்சாதாபப்பட்டு அவளை எப்போதும் இரண்டாம் நிலை குடிகளாகவே சித்தரித்து மகிழ்வதும் அதே போன்றதொரு வக்கிரம் தான்.
ஒரு விபச்சாரி மீது பரிதாபப்படும் எவனும் அவளை அவமதிக்கிறான். அவளை வேறாக பார்க்கிறான். தனக்கு சமமாக அவளை கருத அவன் விரும்பவில்லை என்பது தான் பொருள்.
சரி அது போகட்டும்....தமிழ்நாட்டில் அரசியல் செய்யத்தெரியாத அப்பாவிகள் வாழும் ஊர் எது என்று கேட்டால் அது தூத்துக்குடி தான். அதுவும் தூத்துக்குடி பெண்கள் அரசியலில் பிழைக்கத்தெரியாத அப்பாவிகள் என்றே சொல்லவேண்டும். ஷகீலா போஸ்டருக்கு சாணி அடிக்கும் ஷார்ப்பான புரட்சிப் பெண்கள் உலா வரும் இத்திருநாட்டில் தூத்துக்குடி பெண்களிடம் புரட்சி குறைவோ என்றே தோன்றுகிறது.
பின்னே என்ன?
ஒரு அம்மையார் தைரியமாக டி.வி.யில் தோன்றி "நான் தூத்துக்குடி பெண் என்கிறார் சுகத்தை விற்கும் பெண் என்கிறார் உங்களுக்கெல்லாம் இரத்தம் கொதிக்கவில்லையா? "
"தூத்துக்குடி பெண்கள் எல்லாம் சுகத்தை விற்கும் பெண்களா?" என்று பொங்கி எழுந்து ஈசன் படத்தை ஈயடிக்க விட்டிருக்க வேண்டாமா?
மாலை மலரில் கூளிங் கிளாஸ் அணிந்தபடி பேட்டி கொடுக்கும் புனித வாய்ப்பை தூத்துக்குடி மாதர் குல மேன்மக்கள் இழந்துவிட்டது வருத்தத்திற்குரியது.
ஒரு வேளை அந்த பாடலை ஒரு ஆண் பாடியிருந்தால் தூத்துக்குடி பெண்களுக்கு தூக்கிவாரி போட்டிருக்குமோ என்னவோ?
சமீபத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த ஒரு பாடல் வானம் திரைப்படத்தில் வரும் "எவன்டீ உன்ன பெத்தான்". சரி அப்படி அந்த பாடலில் என்ன தான் இருக்கிறதென்று ஒருமுறை கேட்டு பார்த்தேன். சகிக்க முடியவில்லை. சிம்பு பாடுகிற போது பத்து யமகா பைக்குகள் ரேசுக்கு நிற்பது போல ஒரே இரைச்சல்.
எவன்டீ உன்ன பெத்தான்....கையில கெடச்சான் செத்தான். அடடா என்ன ஒரு கவித்துவம். இந்த பாட்டையும் டி.ஆரின் புகைப்படத்தையும் அருகருகே வைத்து தரிசித்தால் பாடல் சிம்புவின் தங்கையை மனதில் வைத்து எழுதியதாகவே தோன்றுகிறது.
இதன் தொடர்ச்சியாக
"உன்ன ஆத்தா தான் பெத்தாளா?
இல்ல ஆளு வச்சு பெத்தாளா?"
என்கிற ரீதியில் விரைவில் காதல் ரசம் சொட்டும் பாடல்கள் சிம்புவின் தயாரிப்பில் வெளியாகக்கூடும்.
பாடலுக்கு வரி கிடைக்காமல் சிம்பு ரொம்பவே திண்டாடியிருக்கிறார். முதல் சரணத்தில் "என் லேப்டாப் நீ தான் என் செல் போன் பேட்டரி நீ தான் என் ஜீன்ஸ் பேன்ட் ஜிப்பு நீ தான் என் அக்குள் கப்பு நீ தான்" என்கிற ரீதியில் அனைத்து எலக்ட்ரானிக் ஐட்டங்களையும் தன் காதலியாக உருவகித்து மகிழ்கிறார். இரண்டாவது சரணத்தில் காதலியின் "பேஸ் கிரீம் நான் தான் பவுடர் நான் தான் டவல் நான் தான் பேஸ்ட் பிரஷ் நான் தான் " என்று சகல பாத்ரூம் வஸ்துகளையும் சொல்லி கிளுகிளுப்பேற்றுகிறார். இதில் காமெடி என்னவென்றால் காதலன் எப்போதும் ஐபேட் ஐபாட்டோடு சுற்றுகிறார். காதலி பாத்ரூமில் பல் விளக்கி மாங்கு மாங்கென்று எந்நேரமும் குளித்துக்கொண்டே இருப்பாராம்.
இந்த பாட்டிலே தன் மாதர் குல போராளிகளுக்கும் ஒரு வேலை வைத்திருக்கிறார். அதாவது காதலியின் மானம் காக்கும் மேலாடை காதலனாம். மேலாடையை விட பெரும்பாலான சமயங்களில் உள்ளாடைகள் தான் நம் மானத்தை காப்பாற்றி வந்திருக்கிறதென்பது உலக மரபு. ஆனால் கவிஞர் இங்கே உலக மரபை உடைத்தெறிந்து புதிய கண்டுபிடிப்பாக மானம் காக்கும் மேலாடையாக காதலனை உருவகப்படுத்தியிருக்கிறார். அப்படியானால் உள்ளாடை அணியாமல் மேலாடை மட்டும் அணிந்துகொள்ளும் பெண்கள் மானம் உள்ளவர்களா? என்கிற கேள்வி உதயமாகும் புள்ளியில் மாதர் சங்கங்கள் விழித்துக்கொண்டு போர் கொடி உயர்த்தியிருக்கின்றன.
எவன்டீ உன்ன பெத்தான் என்ற வரிகளை ஒரு துள்ளலான மனநிலையோடு அணுகினால் தூக்கலாகத்தன் இருக்கிறது இருந்தாலும் சகிக்கல.

குட்டி சூப்பர் ஸ்டாரின் தந்தை அடிக்கும் லூட்டிக்கு அளவில்லாமல் போய்விட்டது. அதாவது சிம்புவின் கட் அவுட்டுக்கு செருப்பு மாலை போட்டார்களாம். உடனே இவர் கேட்கிறார் "ஏன் அந்த படத்தோட டயரக்டர வசனகர்த்தாவ புரொடியூசர விட்டுட்டு சிம்புவ மட்டும் தாக்குறீங்க?". இதே படம் நல்லா ஓடி பூ மாலை போட்டிருந்தா இவரு சொல்வாரா? "ஏன் சிம்புவுக்கு பூ மால போடுறீங்க போய் இந்த படத்தோட வசனகர்த்தாவுக்கு போடுங்க இயக்குனருக்கு போடுங்க கேமராமேனுக்கு போடுங்கன்னு".
நல்ல காமெடி படம் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. டி.ஆர். கமான். மும்தாஜ் ரெடி. அடுத்த படம் எப்போ?
வருங்காலத்தில் தனுஷின் படங்களை ஜூனியர் தனுஷ் ரீமேக்கினால் சிரமமே இல்லாமல் பஞ்ச் டயலாக் எழுதிவிடலாம்.
ஆடுகளம்.
தனுஷ் - நான் எல்லாம் சுனாமியிலயே ஸ்விம்மங்ங போடுறவன்.
ஜூனியர் தனுஷ் - நான் ஸ்விம் பண்ணினாலே அது சுனாமிடா!!!!சுனாமிடா!!!!சுனாமிடா!!!!
மாப்பிள்ளை.
தனுஷ் - நான் பாயிசன் கிடச்சாலே பாயாசம் மாதிரி குடிப்பேன்.
ஜூனியர் தனுஷ் - நான் பாயாசம் குடிச்சாலே பாய்சனா மாறிடும் அப்போ பெனாயில் குடிச்சா?.
ஜூனியர் சிம்புவுக்கு சிரமமே இல்லை.
எந்த நாதாரி உன்ன பெத்தான்.
மண்-லாரி ஏத்தினா செத்தான்...செத்தான்...செத்தான்....

17 comments:
நல்ல கேள்வி... இருப்பினும் இது புரியவா போகிறது...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
இரண்டாவது மேட்டர் அக்மார்க் விசா நையாண்டி :)
ஆண் : ஒரு ஜான் -------- க்கு தான் எல்லாத்தையும் வாங்குறேன் , நான் எல்லாத்தையும் வாங்குறேன்.
;-)
very nice....ur questions are reasonable...
HI,
Recently I went to a Bar in HK. I saw lot of young girls in very short clothes serving beer etc.,
I felt really sad for them. Are not we misusing their economical status to our advantage. Of course most of them are Filipinos and not Indians. But, still is it right?
Most of the sexual workers are compelled by our society to do this work. Is it not. (almost 99%)
So, if I feel bad about them is it a sin?
Regards
Pradeep
//I felt really sad for them. Are not we misusing their economical status to our advantage. Of course most of them are Filipinos and not Indians. But, still is it right?
Most of the sexual workers are compelled by our society to do this work. Is it not. (almost 99%)
So, if I feel bad about them is it a sin?
//
Right thing.
**பாலியல் தொழிலாளியை இரக்கத்தோடு பார்த்தே தீருவேன் என்று நீங்கள் முடிவெடுத்திருந்தால் இரக்கப்படலாம். யார் என்றால் அவளோடு வியாபார ஒப்பந்தம் செய்யாத ஒருவன் அவளை இரக்கத்தோடு பார்க்கலாம். அவளுக்கு பணம் கொடுத்தும் அவளை தொடாமல் அவளோடு அன்பாக ஆதரவாக உரையாடிவிட்டு முற்றும் துறந்த முடியாத முனிவராய் வருபவன் அவளை இரக்கத்தோடு பார்க்கலாம். **
Wrong is
**
ஆனால் நீ எப்போது சுகத்துக்கு பணம் கொடுக்க துணிந்தும் அவள் சுகத்துக்கு பணம் வாங்க துணிந்தும் விட்டாளோ அப்போதே வியாபார ஒப்பந்தம் முடிந்துவிட்டது. பிறகு எதற்கு மனதை பார் மாங்கல்யத்தை பார் என்ற வீணான சென்டிமென்ட் கோஷம் என்று தான் எனக்கு புரியவில்லை.
ஒருவர் சிக்கன் வாங்க கடைக்கு போய்விட்டு "அய்யோ சிக்கனே ...உன்னை கொல்கிறார்களே ......உயிரை கொடுக்கும் சிக்கனுக்கும் மனசிருக்குது பாரய்யா " என்று உச்சு கொட்டிவிட்டு "நல்ல லெக் பீஸா போடுப்பா" என்று வாங்கி கேட்டு கடித்து துப்பும் கிராதகனாக தமிழன் இருப்பது வேதனை அளிக்கிறது. Double Standards.
பணமும் கொடுத்து சுகமும் அனுபவித்துவிட்டு பிறகு அவளை இரக்கத்தோடு பார்க்கவேண்டும் என்பது அவள் மீது சிறுநீர் கழிப்பதற்கு ஒப்பான செயல் அல்லவா?.
**
HI,
You are wrong. I never slept with a girl other than my wife and have never taken Chicken. So, it is not applicable to me.
Comparing chicken and flesh trade is idiotic.
what I meant was even a girl who has been compelled to do flesh trade has heart.
We are following Jungle Raj. Stronger men (economically) is misusing weaker men. Which is wrong.
Regards
Pradeep
||"சுகத்த விக்கிற பொண்ணுக்கு மனசிருக்குது பாரய்யா" என்ற படு கேவலமான வரியை எழுதியவர் நிச்சயம் பச்சைத் தமிழராகத்தான் இருக்கவேண்டும். காரணம் தமிழனுக்கு மட்டும் தான் எவரையும் பரிதாபமாய் பார்க்கும் பழக்கமுண்டு.
மேலும் ஒரு பாலியல் தொழிலாளியை இரக்கத்தோடு பார்க்கவேண்டிய அவசியம் என்ன?||
செம...
||பாலியல் தொழிலாளியை இரக்கத்தோடு பார்த்தே தீருவேன் என்று நீங்கள் முடிவெடுத்திருந்தால் இரக்கப்படலாம். யார் என்றால் அவளோடு வியாபார ஒப்பந்தம் செய்யாத ஒருவன் அவளை இரக்கத்தோடு பார்க்கலாம். அவளுக்கு பணம் கொடுத்தும் அவளை தொடாமல் அவளோடு அன்பாக ஆதரவாக உரையாடிவிட்டு முற்றும் துறந்த முடியாத முனிவராய் வருபவன் அவளை இரக்கத்தோடு பார்க்கலாம். ||
ஹூம்... இவங்க கூடப் பரிதாபப் வேண்டியதில்லை என்பது என்னோட கருத்து...
அந்தப் பெண் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் அந்தத் தொழிலைச் செய்து கொண்டிருக்கலாம்... எஞ்சினீயரிங் படிச்சிட்டு குமாஸ்தா வேல பார்க்கற மாதிரி...
நிற்க... வலுக்கட்டாயமா அந்தத் தொழில்ல ஈடுபடுத்தப்பட்டால்... அறச்சீற்றம் கொள்ளலாம்... இல்லைனா கையாலாகத்தனமா அவங்க கையாலாகத்தனத்த நினைச்சு அவங்களே உச்சுக் கொட்டலாம்... சுய பச்சாதாபம்..
திரும்ப உங்க வரிகளையே இதுக்கு பதிலா போடலாம்..
||ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் தள்ளுவது எத்தனை கொடூரமானதோ அதே போலத்தான் ஒரு பெண் தன் உடலை விற்று பிழைக்கிறாள் என்பதற்காக அவள் மீது பரிதாபப்படுவதும். அவளை வேறாக பார்ப்பதும், அவளை சமுதாயத்திலிருந்து விலக்கி வைப்பதும் ||
திரைப்படப் பாடல் என்பது என்ன? நீட்டி முழக்கி பிஜிஎம் மோடு பேசறதுதானே?
அப்படிப் பார்த்தால் பாட்டைக் கேட்டுவிட்டு பிடித்திருந்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் பேசாமல் வந்து விடுவது நல்லது.
அதைவிடுத்து அது சரியில்லை இது சரியில்லை என்று குறை சொல்லி கூப்பாடு போடுவது என்பது
கெட்டுப் போன சிக்கனை குழம்பு செய்து அதனை டேஸ்ட் செய்து பின்னர் அதன் மீது சிறுநீர் கழிப்பதற்கு ஒப்பாகும்.
அதெப்படி தலைவா கொஞ்சம் கூட கேப்பே விடாம உங்களால டைப்ப முடியுது?? கலக்கல் பதிவு வழக்கம் போல.
Sugatha vikkara ponnukku manasa yedukku paarkanum??? this is your question, am i right?
The line should be taken in different meaning. The line say/ask to treat them too as normal human being. In our soceity prostitution is big crime, blah blah blah. Y corruption and prostitution still exist in our (any) country. It's bcz of Men like us.
What I'm trying to say is even though they sell themselves, they deserve they should be treated normally in public. Our soceity has to accept the point that without ppl encouragement and support, these women need not to sell their body.
அந்த பாடலாசிரியரோ அல்லது அதை பாடிய அல்லது நடித்த அம்மையார்களோ அல்லது அதை ரசித்து பாராட்டும் தமிழகமக்களோ யாருமே இங்கே பர்வர்ட் அல்லது வக்கிரம் பிடித்தவர்களாகத் தெரியவில்லை.
இதை வைத்துக்கொண்டு பதிவு என்னும் பெயரில் உமது வக்கிரத்தைக் காட்டி இருப்பது தான் மிகவும் கேவலமான ஒன்றாகத்தெரிகிறது.
இணையத்தில் வக்கிரம் பிடித்த ஒரு பெண்ணை லதாராணி உருவில் பார்த்த எனக்கு ஆணிலும் இப்படி சில வக்கிரங்கள் உண்டு என்பதை உமது இந்த வாந்திப் பதிவில் தெரிந்து கொண்டேன். அதற்கு ஜால்ரா போட நாலைந்து பேரைக் கைவசம் வைத்துக்கொண்டு நீர் அடிக்கும் கொட்டத்தை யதேச்சையாகக் காண நேர்ந்தது என் போன்றவர்களின் தலை எழுத்து...
போங்கய்யா... போய் உமது குடும்ப மகளிரை அந்த அம்மையார் நிலைக்கு அனுப்பி விடாமல் கார்த்து உமது கடமைகளைச் செய்யுங்கள்..
பெண்ணுக்கு பெண் கூட இரக்கம் பாராமல் பின்னூட்டம் அளித்த பெண்மணிகளையும் மன்னிக்க தயாராய் இல்லை..
ஐய்யய்யோ.. அப்போ எனக்கு நேர நரகம்தானா... வேற யாராவது மன்னிப்புக் கொடுக்கறதுக்கு இருக்காங்களா இந்த உலகத்தில... எனக்கு உடனடியா ஒன்னரைக் கிலோ மன்னிப்பாவது வேணும்....
கலக்கல் பதிவு. :-)
வந்துட்டர்ரா வாத்தியார் (கலைவேந்தன்)
Post a Comment