
தீபாவளி அன்று காலையே பூந்தமல்லி புருஷோத்தமன் புறப்பட்டார். புதிதாக ஒரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது. பார்த்தே ஆக வேண்டும். உலகத் தமிழர்களுக்காக வேறு அர்ப்பணித்து தொலைத்திருக்கிறார்கள். (உலகத்தமிழர்களுக்கு அர்'பணம்'. தெலுகு டப்பிங் உலக 'தெலுகர்களுக்கு அர்ப்பணம் போல.) எங்கே படத்தை பார்க்காமல் போனால் தமிழன் இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் தேவி தியேட்டரை நோக்கி வண்டியை விட்டார்.
ஆட்டோ அர்னால்ட். ஒரு மழை நாள். மங்காத்தா கட் அவுட்டில் மார்க்கண்டேயன் அஜித்தை, மார்பளவு திரிஷாவை, தொடையளவு லஷ்மிராயை தொலைநோக்கு பார்வை பார்த்தபடி வந்ததில் ஒரு டூ வீலர் மீது டமாரென்று மோதிவிட்டார். மோதிய வேகத்தில் ஆட்டோவிலிருந்து இறங்கினார்.ஆக்ரோஷமாக டூ வீலர் ஆசாமியை நோக்கி...
"ஏய் ...த்தா அறிவில்ல. சிட்டியுள்ள டூ வீலர் ஓட்டுற. எத்தன பேருட கிளம்பியிருக்கீங்க. பச்சவன் தான நீ....கேக்குறேன் பச்சவன் தானே நீ....நீயே இப்படி தப்பு பண்ணா மத்தவன் எப்படியா ஒழுங்கா போவான்....ஊட்டுக்கு போற நேரத்துல டூ வீலர் ஓட்டிகினு கடுப்ப கெளப்புறானுங்க.....கெளம்பு கெளம்பு சிக்னல் போட்டான்.....இல்லாங்காட்டி டார் ஆயிருப்ப......"
டூ வீலர் ஆசாமி ஒரே முறுக்கில் அந்த இடத்தை விட்டு தன்னைத்தானே அப்புறப்படுத்திக்கொண்டார். கொஞ்ச தூரம் போயிட்டு யோசிச்சாரு.
"ஆமா....நாம என்ன தப்பு பண்ணோம். ஒரு ஆட்டோக்காரன் கிட்ட பப்ளிக்கா ஒரு சிக்னல்ல இப்படி அழுகிப்போன தமிழ்ல அர்ச்சன வாங்குற அளவுக்கு நாம என்ன தப்பு பண்ணோம்? ஏதோ தப்பு பண்ணியிருப்போம்..... இல்லேன்னா ஆட்டோக்காரன் அவ்வளவு போர்ஸா இறங்கி திட்டமாட்டானே? "
"அப்படியே தப்பு பண்ணியிருந்தாலும் நாமளும் நாலு வார்த்தை திருப்பி திட்டியிருக்கலாமே. ஏன் திட்டல? பயம். ஏன் பயப்படுறோம்? ஏன் எனக்கு வீரமும் கோபமும் வரமாட்டேங்குது? இதுக்கெல்லாம் காரணம் நான் வரலாறு படிக்காதது தான். வரலாறு படிக்காம கம்ப்யூட்டர் சயன்ஸ் படிச்சது என்னோட குத்தம். உலகத்துக்கே வீரத்த கத்து கொடுத்த தமிழ் இன்னைக்கு வீல் சேருல போயிட்டு இருக்குன்னா அதுக்கு காரணம் நாம வரலாற மறந்தது தான். இந்த படம் ரிலீஸ் ஆனப்புறம் ஒவ்வொரு தமிழன் கிட்டேயும் ஒரு திமிர் வருமுன்னு ஏ.ஆர். முருக்ஸ் வேற சொல்லியிருக்காரு. இது நாம பாத்தே ஆக வேண்டிய படம். ஒவ்வொரு தமிழனும் பாக்குறானோ இல்லையோ, இப்படி செய்யாத குத்தத்துக்காக ஆட்டோக்காரங்க கிட்ட அப்பு வாங்குற அப்பாவி தமிழன் ஒவ்வொருத்தனும் பாக்கவேண்டிய படம்." சாப்ட்வேர் என்ஜினியர் சாமிநாதன் தன் சகலைகள் சங்கமிக்கும் சத்யத்திற்கு படை எடுத்தார்.
ஆட்டோவில் பின்னால் அமர்ந்திருந்த விஜயநகர் அஜித் ஆட்டோ அர்னால்டின் திறமையை மெச்சினார்.
"தீபாவளிக்கு எந்த படம் பாக்கலாம்"
"அந்த படம் தான் . அந்த படத்துல ஏதோ இருக்குது"
"என்ன சார் பெருசா இருக்க போகுது ரெண்டு பாட்டு ரெண்டு பைட்டு....."
"அப்படியெல்லாம் இல்ல. அந்த படத்துல போதிதர்மர பத்தி சொல்லியிருக்காங்க. போதிதர்மர சீனா காரன் கொண்டாடுறான். நாம இங்க மறந்துட்டோம்"
"அட போ சார். நம்மாளு பொங்கல் கொண்டாடுறான் தீபாவளி கொண்டாடுறான் சீனா காரன் போதிதர்மர கொண்டாடுறான். நமக்கு பொங்கலுக்கு லீவு வுடுறான். அவங்களுக்கு போதிதர்மருக்கு லீவு வுடுவாங்க. இதுக்கு என்ன சார் ரொம்ப தான் அலட்டிக்கிற."
ஆட்டோ அர்னால்ட், கோயம்பேடு கோபால், ராயபுரம் சிவமணி, நொச்சிக்குப்பம் நோஞ்சான் இப்படி எல்லோரும் தீபாவளி அன்று காலை பத்து மணிக்கெல்லாம் தியேட்டரில் கூடிவிட்டார்கள். தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. எப்படியும் ஒவ்வொரு தியேட்டரின் வாசலிலும் ஒரு ஆயிரம் பேர் திரண்டிருப்பார்கள். சத்யம் தியேட்டர் வெளியே டிராபிக் ஜாம். ஊட்லண்ட்ஸ் தேவி ஆல்பர்ட் ஐநாக்ஸ் என்று எங்கும் கூட்டம். சென்னை மாநகரில் மட்டுமல்ல. மதுரை திருச்சி கோவை இப்படி தமிழ்நாட்டின் ஒவ்வொரு தியேட்டர் வாசலிலும் இதே நிலமை தான்.
மறந்து போன தமிழ் வரலாற்றை புதுப்பிக்க வந்த கூட்டம்.
இது ஒன்றும் வரலாற்று நிகழ்வு அல்ல. இதற்கு முன்பும் இது போல் கூட்டம் கூடியிருக்கிறது. ரஜினிக்கு கமலுக்கு விஜய்க்கு அஜித்துக்கு....முதல் நாள் முதல் காட்சியை காண இதற்கு முன்பும் இந்த தமிழ் சமூகம் கூடியிருக்கிறது. ஆனால் இப்போது அவர்கள் திரண்டிருப்பது படம் பார்ப்பதற்கு அல்ல. புரட்சி செய்ய.என்ன புரட்சி என்கிறீர்களா? வந்திருக்கும் யாரிடமும் டிக்கெட் இல்லை.
முதல் நாள் முதல் காட்சிக்கு இதுவரை ஒரு டிக்கெட் கூட போனியாகவில்லை. ஆனால் தியேட்டரின் முன்னே ஆயிரம் பேர் திரண்டு மௌனமாய் நின்றுகொண்டிருக்கிறார்கள். கவுன்டரில் டிக்கெட்டை வைத்துக்கொண்டு அம்மா வாங்க அய்யா வாங்க என்று கூவாத குறை. ஆனா ஒரு பய டிக்கெட் வாங்க போகல.
ஒரு தாத்தா வந்து சீசன் டிக்கெட் இங்க கொடுப்பீங்களான்னு நக்கலடிச்சிட்டு போறாரு.
மணி 11 ஆகிறது....12.....1....2 மணி கூட ஆயிடிச்சு ஆனா ஒரு பய டிக்கெட் எடுத்து உள்ள போய் படம் பாக்குறதா இல்ல. ரெண்டு மணிக்கு மேல கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் கலைய ஆரம்பிக்க அடுத்த ஷோவுக்கு கூட்டம் கூடுகிறது. நிலைமை அதே தான். ஒருவரும் டிக்கெட் எடுத்து படம் பார்த்தபாடில்லை.
அப்போது அந்த கூட்டத்திலிருந்த ஆட்டோ அர்னால்டு டி.வி.க்கு அளித்த பேட்டியிலிருந்து.....
கேள்வி: எதுக்காக இந்த போராட்டம்?
திருப்பி அடிக்கணும் சார். எத்தன நாளைக்கு தான் அவனுங்க துரத்துறதும் நாங்க ஓடுறதுமா இருக்குறது. இதே பொழப்பா போச்சு சார். ஒரு படத்த எடுத்துட வேண்டியது. 50 கோடி பட்ஜெட்டுன்னா ஹீரோக்கு 25 கோடி. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு ஒரு மாசம் முன்னாடி டி.வி.ல வந்துடுவானுங்க. அங்ஙனக்க உக்காந்து படத்த இப்படி எடுத்தோம் படத்த அப்படி எடுத்தோம் உழைச்சாரு கிழிச்சாருன்னு லெக்சர். இப்போ ஒண்ணு புதுசா கண்டுபுடிச்சிருக்கானுங்க. ஒவ்வொரு தமிழனும் பாக்க வேண்டிய படம் அப்படின்னு...ஒவ்வொரு தமிழனுக்கும் படத்த பாத்த உடனே கர்வம் வருமாம். தமிழன்ற திமிரு வருமாம்.
ஏன்யா வில்லன் கிட்ட முதல்ல அடிய வாங்குறதும் அப்பாலிக்க ஹீரோ திருப்பி அடிச்சு கிளைமாக்ஸ முடிக்கிறதும் ரஜினி காலத்து பார்முலா. இது தான் கதை. இதுக்கு எதுக்கு போதி தர்மருன்னு புரியல. சூரியா தம்பிய எதுக்கு மெகா சைஸ் ஊறுகா பாட்டில்ல தண்ணிய ரொப்பி ஊற வச்சாங்கன்னு புரியல. உனக்கு எல்லாமே வேணும் போதி தர்மர் வேணும்...பிரஷ்ஷா ஒரு லவ் சீக்வென்ஸ் வேணும் அப்புறம் ஒரு காதல் தோல்வி பாட்டு வேணும் (அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல...மாதிரி) அப்புறம் ஒரு இன்ட்ரோ சாங் அதுவும் ஹீரோ சர்க்கஸ் கம்பெனியில வேல செஞ்சாலும் மல்டி நேஷனல் கம்பெனி ஓனர் மாதிரி செம பீட்டரா இருக்கணும் கூடவே அப்பப்ப டூயட், ஹீரோயின சாக்லேட் பாய் மாதிரி லவ் பண்ணணும் தொட்டுக்க தமிழ் பற்று தாமாஷ்பா நீ.
இது ஒவ்வொரு தமிழனும் பாக்கவேண்டிய படமா? காசு வேண்ணா சொல்லு பத்தோ நூறா மூஞ்சியில விட்டெறியிறேன். அதுக்காக தமிழ் பற்று அது இதுன்னு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் இந்த மாதிரி ஒரு படத்துக்கு சொல்லி எங்கள ஏமாத்தாத. மங்காத்தான்னு ஒரு படம் வந்தது பாத்தியா. அதுக்கும் ஹைப் இருந்திச்சு. அவன் தமிழன் பாக்க வேண்டிய படமுன்னு சொல்லி கூட்டம் சேக்கல. ஆனா கொடுத்த காசுக்கு கூடவே சேத்து கொடுத்தாண்டா கொய்யா. அது தான்டா படம். ஒரு குறைஞ்ச பட்ச தொழில் தர்மம் வேணாம்.
ஸ்க்ரீன் பிளேன்னு ஒண்ணு எழுதியிருக்கியே செம....அப்படியே எடுத்து கண்ணுல ஒத்திக்கலாம்.
செக்ஸ்க்கு முன்னாடி போர் பிளே பண்ணணும்.
படம் எடுக்குறதுக்கு முன்னாடி ஸ்க்ரீன் பிளே பண்ணணுமுன்னு எங்க தாத்தா பேதி தர்மர் அப்பவே சொல்லியிருக்காரு. அது கூட உனக்கு தெரியாம போச்சே எப்படி?
இப்படி பில்ட் அப்ப ஏத்தி ஏத்தி முதல் வாரத்துல முழு கலெக்ஷன எடுக்கணுமுன்னு நெனைக்கிறீங்க இல்ல. அதுக்கு தான் இந்த ஆப்பு. எப்படி நீங்க சாணி மாதிரி ஒரு படத்த எடுத்து டி.வி.ல வந்து ஞானி மாதிரி பேசி ஏமாத்துறீங்க. அதே மாதிரி உங்க படம் ஓடுற தியேட்டருக்கு நாங்களும் படை எடுப்போம். ஆனா ஒரு பய டிக்கெட் வாங்கி படம் பாக்கமாட்டான்.
கேள்வி: பல பேரோட உழைப்ப இப்படி கேவலமா பேசுறீங்களே?
கோர்ட்டுல ஒரு கேஸ் நடந்திச்சு சார். கற்பழிப்பு கேஸ். குற்றவாளி ஒரு பொண்ண கதற கதற கற்பழிச்சிருக்கான். மூணு நாளு ரூம்ல அடச்சு வச்சு இருபது வாட்டி கற்பழிச்சிருக்கான். கோர்ட்டுல எல்லா ஆதாரமும் கொடுத்தாச்சு. எப்படியும் குத்தவாளிக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்குமுன்னு எல்லோரும் நம்பிகிட்டு இருந்தாங்க. ஆனா ஜட்ஜ் அவனுக்கு வெறும் ஆறு மாசம் ஜெயில் தண்டனை கொடுத்து தீர்ப்பு சொல்லிட்டாரு. எல்லாரும் கடுப்பாகி ஜட்ஜ் கிட்ட கேட்டாங்க. அப்போ அவரு சொன்னாரு "உழைப்ப பாருங்கய்யா....மூணு நாள்ள இருபது வாட்டி....அந்த உழைப்பு அதுக்கு நாம தலை வணங்கணும்.". இது தான் சார் தமிழ் சினிமால சில பேரு உழப்பு உழப்புன்னு சொல்லிகிட்டு திரியுறாங்க. மட்டமா ஒரு படம் எடுத்துட்டோமுண்ணு தெரிஞ்சா உடனே ஒளப்ப பாராட்டுங்கன்னு வந்துடுவாங்க.
கேள்வி: தமிழர்கள் தமிழ் வரலாற்றை மறந்துவிடக்கூடாது என்கிற நல்ல கருத்தை சொல்லும் படமல்லவா இது. அதை ஏன் இப்படி....
நிறுத்து சார். கிளைமாக்ஸ் பைட்டுல வில்லன அடிச்சு காலி பண்ணமா
"அப்படி போடு போடு போடு..."
"மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா...."
அப்படின்னு பேக்ரவுண்டுல பாட்ட போட்டு ஹீரோயின கட்டி புடிச்சு அப்பீட் ஆயிருக்கணும். அத விட்டுட்டு கடைசியா சூர்யா ஒரு அட்வைஸ் பண்ணாரு பாருங்க. செருப்பால அடிச்ச மாதிரி இருந்திச்சு. ஏதோ வரலாறு மஞ்சள் பேட்டன்ட் சாணி அப்படி இப்படின்னு சொன்னாரு பாருங்க.....கேமராவ டிக்கியில கட்டிகிட்டு பாரின் லொக்கேஷனுக்கு போய் பாட்டு எடுத்துட்டு வர்ற இவங்க மஞ்சள பத்தியும் சாணிய பத்தியும் சொல்றது என் மூஞ்சியில மனுஷ சாணியும் மாட்டு சாணியும் கலந்து அடிச்ச மாதிரி இருந்திச்சு சார்.
கேள்வி: தமிழர்கள் மறந்த போதி தர்மர கமர்ஷியலா மக்களுக்கு எடுத்து சொன்னது புதிய முயற்சி இல்லையா?
நிச்சயமா அது சாதனை தான். ஆனா அதை சரியா செய்யலையே. ஒண்ணு போதி தர்மரோட வாழ்க்கையை முழுசா எடுத்திருக்கணும். இல்லையா போதி தர்மர் ஒரு குங்பூ கலைஞர். அதனால தானே அவர சூஸ் பண்ணீங்க. ஏன் கணித மேதை ராமானுஜத்தை எடுத்துக்க வேண்டியது தானே. சரி போதி தர்மரோட குங்பூ கலையையும் நிகழ்கால சூர்யாவையும் வச்சு அதிரடியா ஒரு ஆக்ஷன் படம் எடுத்து தள்ளியிருக்கலாமே. நம்ம எந்திரன் சங்கர் கிட்ட கொடுத்தாலே போதி தர்மரோட அருள் வந்து சூர்யா அந்நியாயத்த தட்டி கேக்குற மாதிரி அந்நியன் வரிசையில ஒரு தர்மன் எடுத்திருப்பாரே.சொதப்பலா ஒரு படத்த எடுத்து சப்ப கட்டு கட்டி பேசாதீங்க. இதே தேவி தியேட்டர்ல உலக சினிமாவும் போடுறான் தமிழ் சினிமாவும் போடுறான். நாங்க ஒண்ணும் முட்டாள் இல்ல.
கேள்வி: நோக்கு வர்மம்.
நோக்கு வர்மம். அப்படின்னா என்ன சார்? கண்ணால பாத்தே எதிரிய தன்னத்தானே அழிச்சுக்க வைக்கிறது. அதானே. தமிழ்நாட்டுல இன்னைக்கு நோக்கு வர்மம் இல்லேன்னு யாரு சொன்னா? தமிழ்நாட்டுல இருக்குற ஒவ்வொரு பொண்ணும் நோக்கு வர்மத்துல நொங்கெடுப்பாங்க. கில்லாடிங்க. நீங்களே யோச்சு பாருங்க. அவங்க சும்மா தான் பாக்குறாங்க. ஆம்புளைங்க நாங்க லவ் லவ்வுன்னு எங்கள் நாங்களே அழிச்சுக்குறதில்லையா? இதுக்கு பேரும் நோக்கு வர்மம் தான் சார். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு சார். வெறும் நோக்கு வர்மத்த மட்டும் வச்சே பாதி சீன ஓட்டிடலாமுன்னு நெனச்சா இப்படித்தான். கூகிள வச்சு டி.என்.ஏ ஆராய்ச்சி பண்ணா இப்படித்தான் ஆகும்.
கேள்வி: இவ்வளவு பேசுறீங்களே. நீங்க சொல்லுங்க. போதி தர்மர் கான்செப்ட வச்சு இத விட சிறப்பா ஒரு கமர்ஷியல் படம் செய்ய முடியுமா?
ஏன் முடியாது? இதே கதை தான். சூரியா ஒரு விவசாயி வீட்டு பிள்ளை. கோழையாவே வளந்தவரு. ஸ்ருதி ஆராய்ச்சி பண்ணி சூர்யா தான் போதி தர்மரோட வம்சம்ன்னு கண்டுபுடிக்கிறாங்க. சூர்யா கிட்ட வந்து போதி தர்மர பத்தி சொல்றாங்க. அவரோட சிறப்ப சொல்றாங்க. கொஞ்ச கொஞ்சமா சூர்யா டிரான்ஸ்பார்ம் ஆகுறாரு. நாம் தான் போதி தர்மரோட தலைமுறைங்குற கர்வம் அவருக்கு வருது. தனக்குள்ள ஓடுறது போதி தர்மரோட இரத்தம். கொஞ்சம் கொஞ்சமா போதி தர்மராவே தன்னை உணர்றாரு. அவருக்கு போதி தர்மரோட அசாத்திய சக்திகள் கிடைக்குது. அதுக்கு போதி தர்மர பத்தி நிறைய டீடெயிலிங் தேவை. கடைசியா ஒரு மாஸ் வில்லன். போதி தர்மரோட சக்தி நிறைஞ்ச சூர்யா. அடிச்சு ஆடுறாங்க. படம் முடியுது.
இது இந்த ஆட்டோக்காரன் மண்டைக்கு தோணின கதை சார். அவங்க எல்லாம் பல கோடி சம்பளம் வாங்குற பெரிய பிஸ்தாங்க. அவங்களால இத விட சூப்பரா திங் பண்ண முடியும். ஆனா செய்ய மாட்டேங்குறாங்க.
கேள்வி: கடைசியா உங்க பஞ்ச்.
பாவம் அந்த சூர்யா தம்பிய வேஸ்ட் பண்ணாதீங்க. அவர விட்டுடுங்க.
ஆனா ஒரு சீன்ல ஸ்ருதியோட பிரெண்டு "ப்த்திரம் டீ....அவன் நமக்கு தேவை" அப்படின்னு சொல்லும் பாருங்க....ஐயோ உலக மகா காமெடி. வாட் எ டி.என்.ஏ ஆராய்ச்சிக்குழு.
நான் தமிழங்கோ நான் தமிழங்கோ. தமிழன் கிட்ட போதி தர்மரோட ஜீன் இருக்கோ இல்லையோ என் கிட்ட ரெண்டு லீ ஜீன்ஸ் இருக்கு ஹீ ஹீ ஹீ...

42 comments:
Kalakkal!
kalakkal visa :))
பின்னிட்டீங்க பாஸ்! :-)
விசா! சூப்பர்ப்! :-)
:-)
arpudham , padatha parkavey maten.. kilichiteenga
// மங்காத்தான்னு ஒரு படம் வந்தது பாத்தியா. அதுக்கும் ஹைப் இருந்திச்சு. அவன் தமிழன் பாக்க வேண்டிய படமுன்னு சொல்லி கூட்டம் சேக்கல. ஆனா கொடுத்த காசுக்கு கூடவே சேத்து கொடுத்தாண்டா கொய்யா. அது தான்டா படம். ஒரு குறைஞ்ச பட்ச தொழில் தர்மம் வேணாம்.//
உண்மைதான்!!
கலக்கல் விஸா............!!
//செக்ஸ்க்கு முன்னாடி போர் பிளே பண்ணணும்.
படம் எடுக்குறதுக்கு முன்னாடி ஸ்க்ரீன் பிளே பண்ணணுமுன்னு எங்க தாத்தா பேதி தர்மர் அப்பவே சொல்லியிருக்காரு. அது கூட உனக்கு தெரியாம போச்சே எப்படி?// visa touch.
Very well written. But I do not agree fully. The movie was palatable. The second half was stretched a bit. Movie should have been cut to 2 - 2 and half hours.
Alex, I too agree, the movie was not very bad. It is a very average movie like anyother masala tamil movie. But I hate the hype they created using the Tamil spirit. Tamil & Tamilian has nothing to do with that normal comercial movie. But also there was a lot of disappoinment in the way they handled the subject. The subject has lot of scope. But I am stunned to see how a man can bring down a movie with his worst ever screenplay and handling of a powerful concept.
செம கலக்கல்!
super boss இந்த படத்த பத்தி நான் பார்த்ததுல கலக்கல் விமர்சனம் இதுதான்
hahaha boss! i like your story of 'போதி தர்மன்':)) கீழே tagline 'விவசாயி மகன்'
\\"உழைப்ப பாருங்கய்யா....மூணு நாள்ள இருபது வாட்டி....அந்த உழைப்பு அதுக்கு நாம தலை வணங்கணும்."\\ தமிழ் சினிமாக்காரனுங்க உழைப்புக்கு இதை விட பொருத்தமான உதாரணம் இருக்கவே முடியாது , சூப்பர் !!
பிரமாதமான தலைப்பு. ரெண்டு ஜீன்ஸ்.....?? அது லீ ஜீன்ஸ் ஹா....ஹா....ஹா... [எங்கே இன்டலி ஓட்டுப் பட்டையைக் காணோம், வேறெங்கேயோ thedip போய் ஓட்டு போட்டேன்.
nice
good
//'விவசாயி மகன்'
//
LOL.
இனி விவேக்கோ வடிவேலோ சந்தானமோ போதி தர்மர் கேரக்டர்ல காமெடி டிராக் பண்ண வாய்ப்பிருக்கு. உதாரணமா நோக்கு வர்மத்த வச்சு ஒரு தனி டிராக் பண்ணலாம். செமயா இருக்கும்.
after a long break.... superb article from you.... write more...
Super Boss!!!!!
simply superb! அதுவும் உழைப்பை பற்றிய உங்கள் விளக்கம், அற்புதம்!
படத்தை நேற்று தியேட்டரிலை பார்த்து வராத வீரம் இந்த விமர்சனத்தைப் படிச்சு வந்திடுத்தைய்யா. இரண்டுபேரை வெட்டிச்சாச்சிடுறதென்ற அளவிற்கு என் ஜீன்சிலையும் பேதி தருமரோட வீரம் புகுந்திடிச்சு. பாவிபயல் டைரக்டரும் புரடியூசரும் அடுத்த படத்தை எடுக்கமுதல் காரியத்தை முடிச்சாகணும். அப்புறமா வரேன் BYE...
செம பாஸ், பின்னி பெடலெடுத்துட்டீங்க.....!
திரைக்கதை எழுத பாக்யராஜுக்கு அப்புறம் நீர்தான்!
அபாரமான வார்த்தை வீச்சு! வாழ்த்துக்கள்!
ஏழாம் அறிவை விமர்சித்து வந்த கட்டுரைகளிலேயே நீங்கள் எழுதியதுதான் மாஸ்டர் பீஸ்.முருக தாசை கலாய்த்து நானும் ஒரு பதிவிட்டுள்ளேன்.வருகை தருமாறு அன்போடு அழைக்கிறேன்.
foreplay...screenplay... ahaa...sema...
// கண்ணால பாத்தே எதிரிய தன்னத்தானே அழிச்சுக்க வைக்கிறது. அதானே. தமிழ்நாட்டுல இன்னைக்கு நோக்கு வர்மம் இல்லேன்னு யாரு சொன்னா? தமிழ்நாட்டுல இருக்குற ஒவ்வொரு பொண்ணும் நோக்கு வர்மத்துல நொங்கெடுப்பாங்க. கில்லாடிங்க. நீங்களே யோச்சு பாருங்க. அவங்க சும்மா தான் பாக்குறாங்க. ஆம்புளைங்க நாங்க லவ் லவ்வுன்னு எங்கள் நாங்களே அழிச்சுக்குறதில்லையா? //
கலக்கிட்டீங்க.
பின்னிட்டீங்க பாஸ்! ஏழாம் அறிவு பற்றி வந்த பதிவுகள்ல இதான் செம்ம!
இதை முருகதாஸ் பாக்கணுமே...
இதைப் படிக்கும்போது உண்மையாவே வீரம் வருது பாஸ்! :-)
சினிமா எடுக்க கடுமையாக உழைத்தோம் என்று கூறும் நம்மூர் படைப்பாளிகளை தாளித்தது சூப்பர். 'வீல்சேரில்' தமிழ் அயர்ந்து கிடக்கும் வரிகளை படித்து சிரித்தேன். மொத்தத்தில் நான் படித்த பெஸ்ட் விமர்சனங்களில் ஒன்று.
நான் இன்னும் படம் பாக்கல சார். ஆனா உங்க விமர்சனத்த வச்சுப் பாக்கும்போது அவுங்க தமிழன் தமிழர் அப்படின்னு சொல்லாம இருந்திருந்தா இப்படி கடுமையா விமர்சிக்க வேண்டியிருந்திருக்காதுனு நினைக்கிறேன்.
இவுங்க தமிழர்கள் பாக்கவேண்டிய படம்னு சொல்லாட்டியும் கூட சூர்யாவுக்குனு கண்டிப்பா ஒரு ஹைப் இருந்திருக்கும் :))
உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்
http://www.tamil10.com/
ஒட்டுப்பட்டை பெற
நன்றி
Totally disagree....learn to appreciate the good work....it's easy to pass comments dude....everyone wants to act as if he 's a critic.....People appreciate Myna and not this ..... :-(
It reminds us of our history which makes it more than just a film.....
Try to be more sensible when you write next time......
This guy is appreciating ‘Mangatha’ – shame! It’s a scene-by-scene copy of various English Movies.
This attitude of appreciating stripped content is the result of losing our own self.
I can only appreciate you for your good narrative and Tamil writing skills.
pattasu
மிக சிறப்பான பதிவு . . .
பாராட்டுக்கள் . . .
அந்தாளுங்க படிச்சா . . .
சேனல் சோபா பக்கம் போக மாட்டனுங்க . . .
நன்றி
நல்ல விமர்சனம். என்னுடைய வலைப்பதிவிலும் இதற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன். http://kavipriyanletters.blogspot.com/2011/10/blog-post_7292.html
அருமையான விமர்சனம்!
//கணித மேதை ராமானுஜத்தை
ஏங்க அவருக்கு ஃபைட் தெரியுமா ? யாருமே சொல்லையே.
காந்தி, ராமானுஜம் பத்தி படம் எடுக்க இங்கிலீஷ்காரன்க இருக்காங்க. அவங்க எடுப்பாங்க.
எந்திரனுக்கு அப்புறம் சிரிக்க நல்ல விமர்சனம் :)
//கூகிள வச்சு டி.என்.ஏ ஆராய்ச்சி பண்ணா இப்படித்தான் ஆகும்.// Truth. Nicely reviewed!!
உங்க 'உழைப்பையும்' நிச்சயமா பாராட்டாம இருக்க முடியலை சார்! :))
வலைச்சரம் மூலம், உங்கள் ப்லாக் பற்றி தெரிந்து கொண்டேன். அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்
hahaha... i enjoyed the review a lot.
innaikuthaan first time intha blog ulle vanthen - after replying ur comment in yuva's blog :=)
padam paarkum pothu intha kuraigal avvalava theriyalai. antha vithathula director successnuthaan ninaikaren. thats why the hit.
ippo unga vimarisanam padikumpothu ennaala siripai adakave mudiyalai.
vivekukum vadivelukum oru nokku varmam comedy track idea vera pinnoottathula kuduthu asathiteenga.. :=)))))
Post a Comment